அல்காப்டோனூரியா பற்றி குறிப்பு வரைக
Answers
Answered by
0
இது ஃபைனில் அலனைனின் மற்றும் டைரோசின் வளர்சிதை மாற்றத்தின் குறைபாட்டால் ஏற்படும் ஒர் அரிதான மரபணு நோய்.
விளக்கம்:
இந்த நோய் ஒரு மில்லியன் நேரடி பிறப்புகளுக்கு 2-5 என மதிப்பிட பட்டுள்ளது.
காரணம்
- இந்த நோய் ஹோமோஜென்டிசேட் ஆக்ஸிடேஸ் குறைபாட்டால் வகைப்படுத்தப்படுகிறது.
- ஹோமோஜென்டிசேட் ஆக்ஸிடேஸ் டைரோசின் என்னும் அமினோ அமிலத்தை அசிடைல் கோ.ஏ (Co A) வாக மாற்றுவதை ஊக்குவிக்கும்.
- இந்த நொதியின் குறைபாடு மூலம் அமிலம் (ஹோமோஜென்டிசேட்) உடலில் அதிகமாக உயற்கின்றது.
- ஹோமோஜென்டிசேட் ஆக்ஸிடேஸ் என்ற நொதியால் ஆக்ஸிஜனேற்றப்படும் செய்யப் படுகிறது.
- இந்நோய் ஹோமோஜென்டிசிக் அமிலம் திரட்டப்படுவதால் விளைகிறது.
அறிகுறிகள்:
- ஹோமோஜென்டிசிக் அமிலம் திசுக்கள் மற்றும் இரத்தத்தில் குவிகிறது.
- சிறுநீரில் காணப்படும் மிகவும் குறிப்பிடத்தக்க மருத்துவ வெளிப்பாடு நிகழ்வு ஆகும்.
- காற்றில் வெளிப்படும் போது சிறுநீர் கருப்பு நிறமாக மாறும்.
- டைரோசின் மூலம் உருவாகும் வேறு சில பொருட்களும் இது போல ஆக்சிசன் ஏற்றம் பெற்று கருப்பு நிறமாக காணப்படும். இவை அல்காப்டான்கள் என்று அழைக்கப்படுகின்றன.
- இவை திசு மற்றும் மூட்டுகளில் தங்குவதால் ஆர்த்தரிடிஸ் வர காரணமாக உள்ளது.
- இந்த நிலை ஆக்ரோநோசிஸ் என சொல்லப்படுகிறது.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
English,
5 months ago
Biology,
11 months ago
Social Sciences,
11 months ago
Biology,
1 year ago
Social Sciences,
1 year ago