தீராவைப் பற்றி எழுதுக
Answers
Answered by
0
தீரா
- தீரா என்பது விஞ்ஞானி கந்தர்வனின் அற்புத படைப்பினால் உருவான ஒரு ரோபோ ஆகும். விஞ்ஞானி கந்தர்வன் ஒரு குழந்தை தான் கற்கும் முதல் சொல் தொடங்கி அது வளர வளர பெறும் மொழிச் செயல்பாடுகளின் பல்வேறு படிநிலையினை ஆராய்ந்தார். இந்த ரோபோவினை விஞ்ஞானி கந்தர்வன் இயற்கை மொழி ஆய்வுக்காக உருவாக்கினார். இதனை தமிழ் நாட்டில் உள்ள தன் ஆய்வுக் கூடத்தில் உருவாக்கினார். தீரா ரோபோ தேவைக்கு ஏற்ப தன் வடிவத்தினை மாற்றிக் கொள்ளும் திறம் வாய்ந்தது ஆகும். மேலும் இதன் மென்பொருள் நிரலில், தீரா தன்னை சுற்றி உள்ள சூழ்நிலையில் இருந்து மொழியினை புரிந்து தானே தமிழில் பேசவும், எழுதவும் கூடிய திறனை பதிவு செய்தார்.
Similar questions