வருங்காலத்தில் தேவை எனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவான அந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை குறிப்பிடுக ?
Answers
Answer:
செயற்கை நுண்ணறிவு (AI ) என்பது இயந்திரங்களின் நுண்ணறிவு மற்றும் இதனை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட கணினி அறிவியலின் ஒரு பிரிவாகும். பெரும்பாலான AI உரைநூல்கள் இத்துறையினை "நுண்ணறிவுக் கருவிகளைப் பற்றிப் படித்தல் மற்றும் வடிவமைத்தல்" என வரையறுக்கின்றன,[1] இதில் நுண்ணறிவுக் கருவி என்பது, தன் சூழ்நிலையை உணர்ந்து அதிக வெற்றி வாய்ப்புகளுக்குத் தக்கவாறு செயலில் ஈடுபடும் ஒரு அமைப்பாகும்.[2] ஜான் மேக்கர்த்தி என்பவர் 1956 இல் இந்தச் சொல்லை அறிமுகப்படுத்தி, [10] இதனை "நுண்ணறிவு இயந்திரங்களை உருவாக்கும் அறிவியல் மற்றும் பொறியியல்" என வரையறுத்தார்.[3]
இந்தத் துறையானது மனிதர்களின் ஒரு பொதுவான குணத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது, அதாவது நுண்ணறிவு - ஹோமோ செப்பியன்களின் பகுத்தறிவு - இத்தகைய குணத்தை ஓர் இயந்திரத்திலும் வடிவமைக்க முடியும் என துல்லியமாக விவரிக்க முடியும்.[4] இது மனதின் இயல்பு மற்றும் அறிவியல் பெருமிதங்களின் எல்லைகள் தொடர்பான பல சிக்கல்களைத் தோற்றுவித்தது, மேலும் இந்த சிக்கல்கள் பழமைச் சின்னங்களிலிருந்து புராணம், புதினம் மற்றும் தத்துவம் போன்றவற்றால் விளக்கப்பட்டன.[5] செயற்கை நுண்ணறிவானது ஒரு கடினமான நன்னம்பிக்கையின் துறையாக இருந்துவந்தது,[6] இது துரதிஷ்டவசமாக பல பின்னடைவுகளுக்கு ஆளானது [7] ஆனால் இன்று, இது தொழில்நுட்பம் சார்ந்த துறையில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது, மேலும் கணினி அறிவியலில் பல மிகவும் கடினமான பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் உதவுகிறது.[8]
AI ஆராய்ச்சியானது மிகவும் தொழில்நுட்பமானதும் சிறப்பு வாய்ந்ததும் ஆகும், இதனால் சில திறனாய்வாளர்கள் இத்துறையின் "துண்டாதலுக்கு" கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.[9] AI ன் துணைப்பிரிவுகள், குறிப்பிட்ட சிக்கல்கள், குறிப்பிட்ட கருவிகளின் பயன்பாடுகள் மற்றும் கருத்துக்களின் நீண்டக்கால கொள்கையியல் வேறுபாடுகள் ஆகியவற்றைச் சூழ்ந்து அமைந்துள்ளன. AI ன் முக்கியமான சிக்கல்கள், பகுத்தறிதல், அறிவு, திட்டமிடல், கற்றல், தகவல்தொடர்பு, உணர்ந்தறிதல் மற்றும் பொருள்களை நகர்த்துதல் மற்றும் கையாளுதல் திறன் ஆகிய சில தனிக்கூறுகளை உள்ளடக்கியுள்ளது.[10] பொது நுண்ணறிவானது (அல்லது "வலிமையான AI") சில ஆய்வுகளின்[11] நீண்டகால நோக்கமாக இருந்து வருகிறது இருப்பினும் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் இது சாத்தியமற்றது எனக் கருதுகின்றனர்[சான்று தேவை].