இந்திய தேசிய இயக்கத்தில் லால்-பால்-பால்
ஆகிய மூவரின் பங்களிப்பினை மதிப்பிடுக
Answers
Answered by
1
இந்திய தேசிய இயக்கத்தில் லால்-பால்-பால் என அழைக்கப்படுபவர்கள்:
- லாலா லஜபதிராய், பாலகங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆகும். இவர்கள் தீவிர தேசியவாதத்தினை சார்ந்தவர்கள்.
லாலா லஜபதிராய் :
- பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட லாலா லஜபதிராய் 1915 ல் அமெரிக்காவில் தன்னாட்சி கழகத்தினை தொடங்கினார்.
- பாண்டலே சிறையில் சில நாட்கள் இருந்தார். சைமன் குழு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு போலிஸ் தடியடியில் காயமுற்று உயிர் நீத்தார்.
பாலகங்காதர திலகர்:
- சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என்று முழங்கிய பாலகங்காதர திலகர் கேசரி, மராட்டா முதலிய வார இதழ்களை நடத்தினார்.
- இவர் 1916 ல் புனாவில் தன்னாட்சி கழகத்தினை தொடங்கினார்.
பிபின் சந்திர பால் :
- சுதந்திர போராட்டத்தில் மிதவாதியாக இருந்து பின் தீவிர தேசியவாதியாக மாறினார்.
- சுதேசி இயக்கத்தில் பங்கு கொண்டு அனல் பறக்கும் பேச்சால் தேச உணர்வினை ஊட்டினார்.
Similar questions