நியாண்டர்தால் மனிதன் மற்றும் ஹோமோ
சேப்பியன்ஸ் ஆகியோருக்கிடையே உள்ள
மூன்று ஒற்றுமைகளைக் குறிப்பிடுக.
Answers
Answer:
மனிதனின் வரலாற்றுக்கு முந்தைய காலக்கோடு (Timeline of human prehistory) என்பது ஓமோ சப்பியன்சு ஆப்பிரிக்காவில் 200,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய காலம் தொடக்கம் 5,500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தறிவை மனிதன் உருவாக்கிய காலம் வரையான காலப்பகுதியாகும். இது நடு பழைய கற்காலம் தொடக்கம் வெண்கலக் காலத்தின் மிக ஆரம்ப காலத்தினை குறிக்கும். இக்காலப்பகுதியை பிரித்துக் கூறும் காலக்கேடு ஐரோப்பிய கற்காலத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பினும், உலகின் பல்வேறு பகுதிகளில் கற்காலத்தின் வளர்ச்சி வெவ்வேறு காலகட்டத்தில் நிகழ்ந்தது.
இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் கால எல்லைகள் மானிடவியல், தொல்லியல், மரபியல், நிலவியல் மற்றும் மொழியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஆய்வுகளின் மூலம் அண்ணளவாக குறிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இத்துறைகளில் செய்யப்படும் புதிய ஆய்வுகள் இக்கால எல்லைகளை மாற்றியமைக்ககூடும்.
நியாண்டர்தால் மனிதன்
- ஜெர்மனியின் நியாண்டர் பள்ளத்தாக்கில் சுமார் 34,000 – 1,00,000 ஆண்டுகளுக்கு முன் நியாண்டர்தால் மனிதர்கள் வாழ்ந்தனர்.
- இவர்களின் மூளையின் அளவு ஏறத்தாழ 1400 கன செ.மீ ஆகும்.
- நெருப்பினை பயன்படுத்த, இறந்தவர்களை புதைக்க அறிந்திருந்தனர்.
ஹோமோ சேப்பியன்ஸ்
- நவீன மனித இனம் ஆகிய ஹோமோ சேப்பியன்ஸ் சுமார் 25,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் தோன்றியது.
- ஹோமோ சேப்பியன்ஸ்களின் மூளையின் அளவு ஏறத்தாழ 1300 - 1600 கன செ.மீ ஆகும்.
- ஹோமோ சேப்பியன்ஸ் பயிர் சாகுபடி செய்யத் தொடங்கினர்.
- வீட்டு விலங்குகளை வளர்ப்பதிலும் ஈடுபட்டனர்.
ஒற்றுமை
- இருவரும் நெருப்பினை பயன்படுத்தும் அறிவு, இறந்தவர்களை புதைக்கும் வழக்கம் மற்றும் தோலினை பயன்படுத்தி உடலைப் பாதுகாக்கும் அறிவு உடையவர்களாக விளங்கினர்.