விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி
செய்ய உதவுவது
அ) குவி லென்சு ஆ) குழி லென்சு
இ) குவி ஆடி ஈ) இரு குவிய லென்சு
Answers
Answered by
7
இரு குவிய லென்சு
விழி ஏற்பமைவுத் திறன் குறைபாடு
- வயது முதிர்வின் காரணமாக கண்ணில் உள்ள சிலியரித் தசைகள் வலுவிழந்து போகின்றன.
- மேலும் விழி லென்சும் தன் நெகிழ்வுத் தன்மையினை இழந்து விடுகிறது.
- இதன் காரணமாக உருவாகும் பார்வை குறைபாட்டிற்கு விழி ஏற்பமைவுத் திறன் குறைபாடு என்று பெயர்.
- இந்த குறைபாடு உள்ளவர்களில் சிலரால் அருகில் உள்ள பொருட்களை தெளிவாக காண இயலாது.
- இதற்கு வயது முதிர்வு தூரப் பார்வை குறைபாடு என்று பெயர்.
- விழி ஏற்பமைவுத் திறன் குறைபாடு உள்ள வேறு சிலருக்கு கிட்டப் பார்வை மற்றும் தூரப் பார்வை ஆகிய இரு பார்வை குறைபாடும் உருவாகிறது.
- இரு குவிய லென்சினை பயன்படுத்துவதன் மூலம் விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டினை சரி செய்யலாம்.
Similar questions
English,
5 months ago
India Languages,
10 months ago
Biology,
1 year ago
Environmental Sciences,
1 year ago