. பரும வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன?
Answers
Answered by
0
பரும வெப்ப விரிவு குணகம்
- நீள் வெப்ப விரிவு, பரும வெப்ப விரிவு மற்றும் பரப்பு வெப்ப விரிவு முதலிய வெப்பம் செலுத்தப்படுவதால் திடப் பொருட்களில் ஏற்படும் வெப்ப விரிவின் வகை ஆகும்.
பரும வெப்ப விரிவு
- பரும வெப்ப விரிவு என்பது ஒரு திடப் பொருளை சூடுப்படுத்துவதன் விளைவாக அந்த பொருளின் பருமன் அதிகரிப்பதால் ஏற்படும் விரிவு ஆகும்.
பரும வெப்ப விரிவு குணகம்
- பரும வெப்ப விரிவு குணகம் என்பது ஓரலகு வெப்பநிலை உயர்வினால் பொருளின் பருமனில் ஏற்படும் மாற்றம் மற்றும் ஓரலகு பருமன் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தகவு ஆகும்.
- பரும வெப்ப விரிவு குணகத்தின் அலகு கெல்வின்-1 ஆகும்.
Similar questions