முதலெழுத்து என்றால் என்ன? சார்பெழுத்துகளின் வகைகள்
இலக்கணம்
Answers
Answer:
அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், ‘க்’ முதல் ‘ன்’ வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்.
உயிரெழுத்துகள்: உயிரெழுத்துகள் 12 அவை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
மெய்யெழுத்துகள்: மெய்யெழுத்துகள் 18 அவை க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்
ஆய்த எழுத்து: ஆய்த எழுத்து ஒன்று ஃ
தமிழில் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் மட்டுமல்லாமல் வேறு சில வகை எழுத்துகளும் உள்ளன. இவை முதல் எழுத்துகளின் அடிப்படையில், அவற்றின் கூட்டாக அமைகின்றன. அதாவது முதல் எழுத்துகளைச் சார்ந்து (துணைஎழுத்தாக) வரும் எழுத்துக்களை சார்பெழுத்துக்கள் என்பர்.
தாய் தந்தையரைச் சார்ந்து குழந்தை வாழ்வது போல இந்தச் சார்பெழுத்துக்கள், உயிரெழுத்துக்களையும், மெய்யெழுத்துக்களையும் சார்ந்து வாழும்.
சார்பெழுத்து = சார்பு + எழுத்து
இவை முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துக்கள் என அழைக்கப்படுகின்றது.
'க்' எனும் மெய்யெழுத்து 'அ, ஆ மற்றும் ஈ' போன்ற உயிரெழுத்துக்களுடன் சேரும் போது 'க, கா மற்றும் கீ' போன்ற உயிர் மெய்யெழுத்துக்கள் பிறக்கின்றன. இவ்வெழுத்து பிறப்பதற்கு மூலமாக உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் இருப்பதினால் இது சார்பெழுத்தாகிறது.
Explanation: answer