India Languages, asked by rashidkalodi9231, 10 months ago

சோடியம் குளோரைடு நீரில் கரைந்து உருவாகும்
கரைசல் நீரற்ற கரைசலாகும்.

Answers

Answered by pramodkumardeoghar22
0

Explanation:

சோடியம் குளோரைடு (Sodium chloride) /ˌsoʊdiəm ˈklɔraɪd/,[2] என்பது NaCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் உப்பு மேசை உப்பு அல்லது ஆலைட் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது சோடியம் மற்றும் குளோரைடு அயனிகள் 1:1 என்ற விகிதத்தில் கலந்து உருவாகியுள்ள ஒரு அயனிச் சேர்மம் ஆகும். கடல் நீரின் உவர்ப்புத் தன்மைக்குக் காரணமான முக்கிய உப்பு சோடியம் குளோரைடு ஆகும். பல்லுயிரணு சார் உயிரினங்கள் பலவற்றில் செல்வெளி திரவமாக சோடியம் குளோரைடு காணப்படுகிறது. மேசை உப்பு என்ற உண்ணக்கூடிய பொருளாக இது சுவை சேர்க்கும் பொருளாகவும் உணவு பாதுகாப்புப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. பல தொழிற்சாலை நடைமுறைகளில் சோடியம் குளோரைடு அதிக அளவில் பயன்படுகிறது. சோடியம் மற்றும் குளோரின் சேர்மங்களுக்கு ஆதார மூலமாகவும் சோடியம் குளோரைடு விளங்குகிறது. பல தொகுப்பு வினைகளுக்கு இது ஊட்டு மூலப்பொருளாகவும் உள்ளது. உறை நிலைக்கு கீழான வெப்பநிலையில் பனிக்கட்டி நீக்கியாக இது பயன்படுகிறது.

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்  

கரைச‌ல்  

  • இர‌ண்டு அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட பொரு‌ட்களை உடைய ஒரு படி‌த்தான கலவை‌க்கு கரைச‌ல் எ‌ன்று பெய‌ர்.  

நீர்க்கரைசல்

  • பெரு‌ம்பாலான பொரு‌ட்க‌ள் ‌நீ‌ரி‌ல் கரை‌கி‌ன்றன. இதனா‌ல் ‌நீ‌ர் ஆனது ச‌ர்வ கரை‌ப்பா‌ன் அ‌ல்லது உலகளாவிய கரைப்பான் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • எ‌ந்த ஒரு கரைச‌லி‌ல், கரை பொருளை‌க் கரை‌க்கு‌ம் கரை‌ப்பானாக ‌நீ‌ர் செ‌ய‌ல்படு‌கிறதோ அ‌ந்த கரைச‌ல் ‌நீ‌ர்‌‌க் கரைச‌ல் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • அ‌திகமான அய‌னி‌ப்‌ ‌பிணை‌ப்பு‌ச் சே‌ர்ம‌ங்களே ‌நீ‌ரி‌ல் கரை‌ந்து ‌நீ‌ர்‌க் கரைசலை உருவா‌க்கு‌கிறது.
  • சோடியம் குளோரைடு நீரில் கரைந்து உருவாகும் கரைசல் நீ‌ர்‌க் கரைச‌ல் ஆகும். ‌
  • மேலு‌ம் ச‌ர்‌க்கரை, கா‌ப்ப‌ர் ச‌ல்பே‌ட் முத‌லியனவு‌ம் ‌நீ‌ரி‌ல் கரை‌ந்து ‌நீ‌ர்‌க் கரைசலை உருவா‌க்கு‌கி‌ன்றன.
Similar questions