India Languages, asked by isgu3414, 11 months ago

எந்த ஹார்மோன் உற்பத்திக்கு அயோடின் அவசியமாகிறது? நாம் உட் கொள்ளும்
உணவில் அயோடின் குறைவாக இருப்பதால் ஏற்படும்
விளைவுகள் யாவை?

Answers

Answered by steffiaspinno
0

தைராய்டு சுரப்பி

  • ட்ரை அயோடோ தைரானின் மற்றும் டெட்ராஅயோடோ தைரானின் அல்லது தைராக்சின் ஆகியவை தைராய்டு சுரப்பிகளால் சுரக்கப்படும் சுரப்பிகள் ஆகும்.
  • தைராய்டு சுரப்பி இயல்பான அளவில் ஹார்மோன்களை சுரக்காமல் இருக்கும் நிலைக்கு தைராய்டு குறைபாடு என்று பெயர்.
  • தைராய்டு ஹார்மோன் இயல்பாக சுரப்பதை விட குறைவாக சுரந்தால் ஹைப்போ தைராய்டிசம் எனவும், அதிகமாக சுரந்தால் ஹைபர் தைராய்டிசம் எனவும் அழைக்கபடுகின்றன.

உணவில் அயோடின் குறைவாக இருப்பதால் ஏற்படும் விளைவுகள்

  • உணவில் தேவையான அயோடின் இல்லாமல் இருந்தால் தைராய்டு குறைபாடு ஏற்படுகிறது.
  • இதனால் எளிய காய்டர் என்னும் நோய் உண்டாகிறது.
  • இந்த நோயினால் பாதிக்கபட்டவர்களின் கழுத்து பகுதி வீக்கத்துடன் காணப்படும்.
  • இமய மலை பகுதியில் குறைந்த அளவே அயோடின் கிடைக்கிறது.
  • எனவே அங்குள்ள மக்கள் இந்த நோயினால் அதிகமாக பாதிக்கபடுகின்றனர்.
  • இதுவே உட்கொள்ளும் உணவில் அயோடின் குறைவாக இருப்பதால் ஏற்படும் விளைவுகள் ஆகும்.
Similar questions