India Languages, asked by RockAtIf9614, 11 months ago

கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக
உருவாக்கப்பட்ட, துரு நோய்க்கு எதிர்ப்புத்
தன்மைப் பெற்ற ஹிம்கிரி என்பது __________
இன் ரகமாகும்.
அ. மிளகாய் ஆ. மக்காச்சோளம்
இ. கரும்பு ஈ. கோதுமை

Answers

Answered by steffiaspinno
0

கோதுமை

  • கலப்பினமாக்கம் என்பது அதிக மகசூல் தரும் தாவரங்களை உற்பத்தி செய்யும் ஒரு முறையாகும்.
  • இந்த முறையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தாவரங்களின் பண்புகளை ஒன்றாக சேர்த்து புதிய தாவரத்தை உருவாக்கும் முறையாகும்.
  • உருவாகும் புதிய தாவரமானது தாய் தாவரத்தை விட நல்ல வீரியமுள்ள தாவரமாக இருக்கும்.  
  • நுண்ணியிரிகளான பாக்டிரியாக்கள், பூஞ்சைகள், வைரஸ்கள் ஆகியவை பயிர்களில் நோயினை உண்டாக்குகின்றன.
  • இதனால் பயிரின் மகசூல் குறைகிறது.
  • மகசூலை அதிகரிக்க மிகக் குறைந்த அளவில் பூஞ்சை கொல்லிகள் மற்றும் பாக்டீரியா கொல்லிகள்  தாவரங்களுக்கு அளிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு திறன் உண்டாக்கப்படுகின்றன.
  • கோதுமையில் ஹிம்கிரி என்னும் ரகமானது , துரு நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்புத்  தன்மைப் பெற்றுள்ளது.
Similar questions