குருத்தணுக்கள் எவ்வாறு புதுப்பித்தல்
செயல்பாட்டிற்கு பயன்படுகின்றன?
Answers
Answered by
0
புதுப்பித்தல் செயல்பாட்டிற்கு குருத்தணுக்கள் பயன்படும் விதம்
- நோய், ஜீன்களில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் விபத்துகள் முதலியனவற்றில் ஏதேனும் ஒன்று ஏற்பட்டாலும் நமது உடலில் செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகள் சில நேரங்களில் நிரந்தரமான சேதம் அடைந்து செயழிந்து போகின்றன.
- அவ்வாறு உறுப்புகள் சிதைவடையும் நிலை ஏற்படும் போது குருத்தணுக்களின் அடிப்படையாக கொண்ட சிகிச்சையின் மூலம் அந்த குறைபாடுகளை நாம் சரிசெய்ய இயலும்.
- நரம்பு குருத்தணுக்கள் (Neuronal stem cells) பார்க்கின்சன் நோய் மற்றும் அல்சீமர் நோய் முதலியன நரம்புச் சிதைவு குறைபாடுகளை சரி செய்ய குருத்தணு சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.
- நரம்பு குருத்தணுக்களை பயன்படுத்தி சிதைவடைந்த அல்லது இழந்த நியூரான்களுக்கு பதிலாக பதிலீடு செய்யப்படுகின்றது.
- இதன் மூலம் அந்த குறைபாடுகள் நீக்கப்படுகிறது.
Similar questions