World Languages, asked by pdnayagam50, 11 months ago


மாற்று திறனாளியனா மதித்தல் வேண்டும் [ கட்டளைத் தொடராக்கு]

Answers

Answered by knishchala86
0

Answer:

முதுமையின் நிகழ்வுகளை விஞ்ஞான ரீதியில் நோக்கும்போது, அவர்களுக்கு வரும் உடலியல் தொழிற்பாடு பாதிப்புகள் அதிகம். இவற்றால் உணர்வு சக்தி குறையத் தொடங்கும். இளமைக்கு எப்பொழுதுமே முதுமை பற்றிய அறிவு இருத்தல் வேண்டும். இன்றைய தினம் அக்டோபர் முதல் நாள், முதியோருக்கான நாள். ஆம், இன்று உலக முதியோர் தினம்.

உலக முதியோர் தினம்:

இந்த 21-ம் நூற்றாண்டில் வாழ நாமே தடுமாறிக்கொண்டிருக்கும் போது, வயது முதிர்ந்தோர் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை கருத்தில் கொண்டுதான் முதியோருக்கான தனி தினமும் சிறப்பு திட்டங்களும் கொண்டுவரப்பட்டன. 1990-ம் ஆண்டு ஐ.நா. சபை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. ஆண்டுதோறும் அக்டோபர் முதல் தேதி உலக முதியோர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், செயல்பாட்டுக்கு முதியோருக்கான திட்டம் வந்தது என்னவோ 2002-ல் தான்.

மூத்தோருக்கான சட்டம்:

பெற்றோர் மற்றும் மூத்தகுடி மக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டம் 2007-ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் மூலம் “கைவிடப்பட்ட மூத்த குடிமக்களுக்கு சட்டப்படியாக பாதுகாப்பு வழங்குதல்”, “உறவினர்களால் ஒதுக்கப்பட்ட மூத்த குடிமக்களின் சொத்துகளை மீண்டும் ஒப்படைத்தல்”, “மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு இல்லங்கள் நிறுவுதல்” என பல சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுளது.

இத்தினத்திற்கான நோக்கம்:

இன்றைய சூழலில், முதியோருக்கான சுதந்திரம், பங்களிப்பு, வயதில் மூத்தவர்களை மதித்தல் போன்றவற்றை நடைமுறையில் முழுவதுமாக சாத்தியமாக்குவது தான் இந்த தினத்தின் மூலக்கூறு. இன்னும் கூறப்போனால் உலக அளவில் 2008ம் ஆண்டு நிலவரப்படி 60 வயதுக்கு மேற்பட்டோர் 60 கோடியை தாண்டியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இவ்வாறான எண்ணிக்கை அதிகமாவது பெரும்போலும் நம்மை போன்ற வளரும் நாடுகளில் தான் என்பது குறிப்பிடதக்கது.

உலகமெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து ஆராய்வதும் அவர்களுக்கென ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதுமே இந்த நாளின் பிரதான நோக்கம்.

விரிசலடையும் உறவுகள்:

புகழ்பெற்ற புதுக்கவிதை ஒன்று உண்டு.

“வீட்டுக்கு பெயரோ அன்னை இல்லம்.

அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்”

இந்த இருவரிக்கவிதை பல சொல்லமுடியாத கதைகளைச் சொல்கிறது நமக்கு அண்மைக்கால ஆய்வுகளின்படி, கடந்த 10 ஆண்டுகளில் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இயந்திரமான வாழ்க்கை, மேலைநாட்டு கலாச்சாரத்தின் தாக்கம் போன்றவற்றின் காரணமாக பெற்றோர்-பிள்ளைகளுக்கான உறவில் விழும் விரிசல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த இயந்திர வாழ்கையில் சிக்குண்ட நாம் நம் பெற்றோருடனும் மனிதருடனும் பேசும் நேரத்தைக் குறைத்துக்கொன்டே வருகிறாம்.

மதிக்க கற்றுகொள்வோம்:

பெரியோர்களை மதி, கவனித்துக் கொள் என்ற அறிவுறை கூறி வளர்த்தல் வேண்டும். நம் தலைமுறைகளின் விழுதுகளை தந்த ஆலமரங்களை தலை தாழ்த்தி வணங்குவோம். கண்ணியமாகவும், கவுரவமாகவும் மதிக்கவேண்டிய மனிதர்கள் இவர்கள். வயது மிகுந்த நமது பெற்றோரையும், ஆதரவற்றவர பெரியோரையும் மதித்து, அணைத்து, ஆதரவளிக்கும் நல்லெண்ணத்தையும் நல்லொழுக்கத்தையும் கற்றுக்கொள்வோமாக!!! நாளை நமக்கு வரும் முதுமையை இன்றிலிருந்தே மதித்து போற்றி வாழ்வோமாக!!!!

-ஜெ. நிவேதா

மாணவப் பத்திரிகையாளர்.

Answered by vinay1393
0

Answer:

the Marathas are the characteristics that it has

Similar questions