பெண்கல்வி குறித்து ஒரு பத்தி
Answers
Answer:
பெண்களின் கல்வி என்பது பெண்கள் கல்வி பெறுவதற்கான உரிமை, அதன் நிலைமை, தடைகள், எதிர்காலம் போன்ற பல விடயங்களைக் குறிக்கும். வரலாற்றின் பெரும் பகுதியில், அனேக சமூகங்களில் பெண்கள் ஆண்களுக்கு நிகரான கல்வி பெறும் வாய்ப்பைப் பெறவில்லை. 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டில் வளர்ச்சி பெற்ற பெண்ணிய இயக்கம், அனைவருக்கும் கல்வி என்ற கோட்பாடு போன்றவை பெண்களுக்கான சம கல்வி வாய்ப்புக்களை ஓரளவு ஏற்படுத்தந்தன. இன்று சில மேற்குநாடுகளில் இந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி பெண்கள் ஆண்களை விட கூடுதலான அதி உயர் கல்வியைப் பெறுகிறார்கள். ஆனால் இன்னும் பல நாடுகளில் பெண்களின் கல்வி ஆண்களை விடப் பின் தங்கியதாகவே உள்ளது. இதற்குக்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்தியா ஆகும். கடைசிக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 53.63% பெண்கள் மட்டுமே படிப்பறிவு பெற்றவர்கள், ஆண்கள் ஏறத்தாழ 20% விட அதிகமாக 75.26% கல்வியறிவு பெற்றவர்கள்.
PLEASE MAKE ME AS BRAINLIAST ...............