பகுபத உறுப்புகள் எடுத்துக்காட்டாக
Answers
Answer:
Hi Nanba !
பகுபத உறுப்புகள்:
பகுபத உறுப்புகள் ஆறு ஆகும். அவை, பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.
i) பகுதி: பகுதியானது ‘ஏவல்’ வினையாக வரும்.
உதாரணம்: படித்தான் – படி என்பது பகுதி
ii) விகுதி:
விகுதியானது இறுதியில் வரும்.
இது திணை, எண், பால், இடம் ஆகியவற்றைக் குறிக்கும்.
உதாரணம்:
உயர்திணை:
நடந்தான் – ஆன் – ஆண்பால் விகுதி
நடந்தாள் – ஆள் – பெண்பால் விகுதி
நடந்தனர் – அர் – பலர்பால் விகுதி
அஃறிணை:
நடந்தது – அது – ஒன்றன்பால் விகுதி
நடந்தன – அ – பலவின்பால் விகுதி
iii) இடைநிலை:
பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வரும். இது காலத்தை உணர்த்துவதால் ‘காலங்காட்டும் இடைநிலை’ எனப்படும்.
இது நான்கு வகைப்படும். அவை,
அ. நிகழ்கால இடைநிலை: கிறு, கின்று, ஆநின்று
உண்கிறான் – உண் + கிறு + ஆன்
உண்கின்றான் – உண் + கின்று + ஆன்
உண்ணாநின்றான் – உண் + ஆநின்று + ஆன்
ஆ. இறந்தகால இடைநிலை: த், ட். ற். இன்
இ. எதிர்கால இடைநிலை: ப், வ்
ஈ. எதிர்மறை இடைநிலை: இல், அல், ஆ
உண்டிலன் – உண் + ட் + இல் + அன்
காணலன் – காண் + அல் + அன்
பாரான் – பார் + ஆ + அன்
iv) சந்தி: இது பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.
v) சாரியை: இது பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் சார்ந்து வரும். அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம் ஆகியவை சாரியை ஆகும்.
உதாரணம்: உண்டனன் – உண் + ட் + அன் + அன்
vi) விகாரம்: பகுதி, இடைநிலை, விகுதி போன்றவை சேரும்போது ஏற்படும் மாறுபாடு விகாரம் எனப்படும்.
உதாரணம்: ‘வந்தான்’ எனும் சொல்லில் ‘வா’ எனும் பகுதி ‘வ’ என வந்துள்ளது, இதுவே விகாரம் ஆகும்.
Explanation:
Hope it helps u
brainliest plz
#Tamil ponnu here
" Follow me "