அரநெறிக்கல்வியின் முக்கித்துவம் ௭ன்ன?
Answers
கல்வி என்னும் பயிரையும் பருவத்தோடு பயிரிட்டனர் . பருவ வயதிற்கு (Teen age) முன்னர், அறம் மற்றும் ஒழுக்கத்தைக் கற்பித்தனர், பிரம்மச்சரியத்தை போதித்தனர் . உணர்ச்சி மிகும் போது அறிவு குன்றும். ஆகையால் புலனுணர்ச்சியைத் தூண்டும் பருவ வயதை எட்டும் முன் அறம் மற்றும் ஒழுக்கத்தை போதித்தனர். உணர்ச்சி வெள்ளம் அதிகரிக்கும் முன் ஒழுக்கம் என்ற அணையைக் கட்டினார் அத்தடுப்பணை வாழ்வின் நெறி பிறழாமல் காத்தது. இதை நம் இன்றய கல்விமுறை செய்ய தவறிவிட்டது . இன்றய தொலைக்காட்சி,திரைப்படம் , இணையம் அனைத்துமே ஒழுக்கத்திற்கு மாறான பால் உணர்வுகளை அதிகரிக்கவே செய்கிறது . இதன் உச்சக்கட்டமே இன்று தகாத உறவுக்குக்காக தன் இரு குழந்தைகளை ஒரு தாய் கொலை செய்ததும். தன் காதலுக்கு தடையாக இருந்த தாயை மகள் கொலைசெய்த சம்பவங்களாகும். இத்தகைய ஒழுக்கசீர்கேட்டிற்கு எவ்வாறு நாம் முற்றுப்புள்ளி வைக்கப்போகிறோம்.