பண மதிப்பு பற்றிய கேம்பிரிட்ஜ் சமன்பாடுகளை விளக்குக.
Answers
Answered by
0
பண மதிப்பு பற்றிய கேம்பிரிட்ஜ் சமன்பாடுகள்
கேம்பிரிட்ஜ் அணுகுமுறை (ரொக்க இருப்பு அணுகுமுறை)
மார்ஷலின் சமன்பாடு
- மார்ஷலின் சமன்பாடு M = KPY ஆகும்.
- இதில் M என்பது பணத்தின் அளவு, Y என்பது சமுதாயத்தின் மொத்த உண்மை வருமானம், P என்பது பொது விலை மட்டம் மற்றும் K என்பது மக்கள் தங்கள் கையில் ரொக்கமாக வைத்திருக்க விரும்பும் சமுதாயத்தின் மொத்த உண்மை வருமானத்தின் ஒரு பகுதி ஆகும்.
- M = KPY
- என்ற சமன்பாடு பொது விலை மட்டத்தினை கண்டறிய உதவுகிறது.
- இதை தலைகீழி எடுத்தால் கிடைக்கும் என்ற சமன்பாடு பண மதிப்பினை கண்டறிய உதவுகிறது.
- இந்த சமன்பாட்டின் முலம் பணத்தின் மதிப்பினை மக்கள் வைத்திருக்க விரும்பும் உண்மை வருமானத்தினை (KY) பண அளிப்பினால் (M) வகுத்தால் அறியலாம்.
- இதில் KY என்பது மொத்த பணத்தேவையின் அளவு ஆகும்.
- பண அளவினை விட மக்கள் வைத்திருக்க விரும்பும் உண்மை வருமானத்தின் பகுதி ஆனது பண மதிப்பினை தீர்மானிக்க உதவுகிறது.
Similar questions