Economy, asked by jameyj7881, 11 months ago

இந்தியாவில் பொருளாதாரத் திட்டமிடல் பரிணாம வளர்ச்சியை மதிப்பிடுக

Answers

Answered by steffiaspinno
0

இந்தியாவில் பொருளாதாரத் திட்டமிடல் பரிணாம வளர்ச்சி

  • இ‌‌ந்‌தியா‌வி‌ல் பொருளாதார ‌தி‌ட்ட‌மிட‌லி‌‌ன் ப‌ரிணாம வள‌ர்‌ச்‌சியாக ஆறு ‌தி‌ட்ட‌ங்க‌ள் கருத‌ப்படு‌கி‌ன்றன  

விஸ்வேசுவரய்யா திட்டம்

  • பொ‌றி‌யிய‌ல் வ‌ல்லுந‌ர் எ‌ம். விஸ்வேசுவரய்யா எ‌ன்பவரா‌ல் விஸ்வேசுவரய்யா திட்டம்  1934 ஆ‌ம் ஆ‌ண்டு கொ‌ண்டு வர‌ப்ப‌ட்டது.  

ஜவஹர்லால் நேரு திட்டம்

  • 1938 ஆ‌ம் ஆ‌ண்டு தேசியத் திட்டக் குழு (ஜவஹர்லால் நேரு திட்டம்)  ஒ‌ன்றை அமை‌த்தா‌ர்.  

பாம்பே திட்டம்

  • 1938 ஆ‌ம் ‌ஆ‌ண்டு பா‌ம்பே ‌தி‌ட்ட‌ம் மு‌‌ம்பை‌யி‌ன் மு‌ன்ன‌ணி தொ‌ழில‌திபர்களா‌ல் மு‌ன்மொ‌ழிய‌ப்ப‌ட்டு, 1940 ஆ‌ம் ஆ‌ண்டு துவ‌ங்க‌ப்ப‌ட்டது.  

காந்தியத் திட்டம்

  • 1944 ஆ‌ம் ஆ‌ண்டு எஸ்.என் அகர்வால் என்பவர் காந்தியத் திட்டம் என்ற திட்டத்தை வழ‌ங்‌கினா‌ர்.
  • கா‌ந்‌திய‌த்‌ ‌தி‌ட்ட‌ம் ஆனது வேளாண்மை மற்றும் கிராமியப் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்ட‌ம் ஆகு‌‌ம்.

மக்கள் திட்டம்

  • 1945 ஆ‌ம் ஆ‌ண்டு எம்.என்.ராய் எ‌ன்பவ‌ர் ம‌க்க‌ள் ‌தி‌ட்ட‌ம் எ‌ன்ற ‌தி‌ட்ட‌த்‌தினை வடிவமை‌த்தா‌ர்.
  • வேளாண்மை உற்பத்தி மற்றும் உ‌ற்ப‌த்‌தி பொரு‌ட்க‌ளி‌ன் ‌வி‌ற்பனையை இயந்திர மயமாக்குத‌ல் ம‌ற்று‌ம்  நுகர்வுப் பொருட்களை அரசே ‌வி‌ற்பனை செ‌ய்தலை வ‌லி‌யுறு‌த்‌தியது.  

சர்வோதயத் திட்ட‌ம்  

  • ஜெயப்பிரகாஷ் நாராயணன் எ‌ன்பவரா‌ல் 1950 ஆ‌ம் ஆ‌ண்டு கொ‌ண்டு வர‌ப்ப‌ட்ட ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு ச‌ர்வோதய‌த் ‌தி‌ட்ட‌ம் எ‌ன்று பெ‌ய‌ர்.  ‌
  • இது விவசாய‌ம் ம‌ட்டு‌ம் அ‌ல்லாம‌ல் ‌சிறு ம‌ற்று‌ம் குடிசைத் தொழில்களுக்கு ஊக்கமளிக்கும் கூறுகளைக் கொண்டத் திட்டமாக உ‌ள்ளது.
Similar questions