India Languages, asked by sankar13051967, 10 months ago

காற்றே வா கவிதையில் பாரதியார் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக

Answers

Answered by sarahssynergy
5
  • மகரந்தத்தூளைச் சுமந்து கொண்டு மனதை மயங்கச் செய்கின்ற வாசனையுடன் வா.
  • இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து வா.
  • உயிர்வளியைக் கொடு. ஆனால் பேய்போல் வீசி உயிராகிய நெருப்பை அணைத்து விடாதே
  • நீடித்து நின்று நன்றாக வீசு, உன் சக்தி குறைத்து எம் உயிரை அவித்து விடாதே!
  • உம்மை நாம் பாடுகிறோம், புகழ்கிறோம், வழிபடுகிறோம் என்றெல்லாம் பாரதி, காற்றே வா’ என்ற பாடலில் பாடுகிறார்

Explanation:

இப்பாடலை எழுதியவர் பாரதியார்

  • பாடலின் கருத்து. நீரின்றி அமையாது உலகு .
  • அதுபோல காற்றுதான்  இந்த உலகத்தின்  எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படையான  ஒன்று.
  • உயிர் வலி தரும் காற்றைப்போல  இல்லாமல்   மென்மையான காற்றை தந்து ஏங்களுடன் வந்து சேர்வாயாக.
  • இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து வா.
  • உயிர்வளியைக் கொடு. ஆனால் பேய்போல் வீசி உயிராகிய நெருப்பை அணைத்து விடாதே
  • நீடித்து நின்று நன்றாக வீசு, உன் சக்தி குறைத்து எம் உயிரை அவித்து விடாதே!

காற்றே,வா.

மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனத்தை

மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா; இலைகளின்மீதும், நீரலைகளின்மீதும் உராய்ந்து, மிகுந்த ப்ராண - ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு.

காற்றே,வா.

எமது உயிர் - நெருப்பை நீடித்துநின்று நல்லொளி தருமாறு நன்றாக வீசு.

சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே.

பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே.

மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம்

          நின்று வீசிக் கொண்டிரு.

உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்.

உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.

உன்னை வழிபடுகின்றோம்.

                                                            -பாரதியார்

Answered by ZareenaTabassum
2

“காற்றே வா” பாடலில் பாரதியார் கூறும் செய்தி:

  • மகரந்தத்தூளைச் சுமந்து, மனதை மயக்கும் வாசனையுடன் வா இலைகள் மற்றும் நீரலைகள் மீது உராய்ந்து வா
  • உயிர் வளியைக் கொடு. ஆனால் பேய்போல் வீசி உயிராகிய நெருப்பை அணைத்து விடாேத
  • நீடித்து நின்று நன்றாக வீசு, உன் சக்தி குறைத்து எம் உயிரை அவித்து விடாதே!
  • உம்மை நாம் பாடுகிறோம், புகழ்கிறோம், வழிபடுகிறோம் என்றெல்லாம் பாரதி, காற்றே வா என்ற பாடலில் பாடுகிறார்

காற்றே வா கவிதை:

காற்றே, வா.

மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை

மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா;

இலைகளின்மீதும், நீரலைக ளின்மீதும் உராய்ந்து, மிகுந்த

ப்ராண – ரஸத்தை எங்க ளுக்குக் கொண்டு கொடு.

காற்றே, வா.

எமது உயிர் – நெருப்பை நீடித்துநின்று நல்லொளி தருமாறு

நன்றாக வீசு.

சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே.

பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே.

மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்கா லம்

நின்று வீசிக் கொண்டிரு.

உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்.

உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.

உன்னை வழிபடுகின்றோம்.

“திக்குகள் எட்டும் சிதறி – தக்கத்

தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட

பக்க மலைகள் உடைந்து வெள்ளம்

பாயுது பாயுது பாயுது – தாம்தரிகிட

தக்கத் ததிங்கிட தித்தோம் – அண்டம்

சாயுது சாயுது சாயுது – பேய்கொண் டு

தக்கை யடிக்குது காற்று – தக்கத்

தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட”

SPJ3

Similar questions