முன்னுரை - அறிவியலும் வாழ்க்கையும் - அன்றைய எண்ணங்கள் இன்றைய வளர்ச்சி
- மருத்துவத்துரையில் அறிவியலின் வளர்ச்சி - முடிவுரை.
Answers
Answer:
மேற்குலகம் அறிவிலும் மற்றும் பலதுறைகளிலும் முதன் முதலில் பெரிய அளவில் முன்னேறி அறிவார்ந்த சமூகமாக உள்ளது, ஆனால் நம்மால் இன்னும் அறிவியலைத் தமிழில் கொண்டுவருவதற்கே முடியவில்லை. நாமும் ஒரு அறிவார்ந்த சமூகமாக மாறி புதிய அறிவியல் தத்துவங்களை தமிழில் படைக்க நாம் என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி பலருக்கும் உண்டு. சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு கிரேக்க சிந்தனையாளர்கள் உருவாக்கிய தத்துவப் படைப்புகள் நவீன உலகை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தது மட்டுமில்லாமல், இன்றும் அறிவியல் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. ஏன் அவர்களால் முடிந்தது, ஆனால் நம்மால் இந்த நவீன உலகில் பல வசதிகளிருந்தும் ஏன் முடியவில்லை? காலனி ஆதிக்கம், அந்நியர் ஆட்சி, அரசுகளின் முயற்சியின்மை, மக்களின் ஆங்கிலமோகம் என பல பதில்கள் இருந்தாலும், இவை நமது நிலைமைக்கு முழுக் காரணங்களாக எடுத்துக்கொள்ள முடியாது. மாறாக நாம் அறிவார்ந்த சமூகமாக இருந்திருந்தால், நாம் இன்று காணும் பல சிக்கல்களே தோன்றாமலே இருந்திருக்கலாம், அல்லது சிக்கல்களை என்றோ தீர்த்திருப்போம். நாம் ஏன் அறிவார்ந்த சமூகமாக மாறவேண்டும் என்று நான் விளக்கத் தேவையில்லை. இது அனைவரும் தெரிந்த தெளிவான விடயம்.
ஒரு சமூகத்தை அறிவார்ந்த முன்னேறும் சமூகமாக மாற்றும் அடிப்படை காரணிகள் எவை என்ற கேள்விக்கு நான் கற்ற சில நூல்களிருந்து என்னால் ஒரளவு விடைகாண முடிந்தது. அவற்றைப் பகிர்வதுதான் இக்கட்டுரையின் முக்கிய நோக்கம். இந்த காரணிகளை இரண்டு பிரிவாக நான் பிரிக்கிறேன். ஒன்று, ஒரு சமூகத்தில் சில குறிப்பிட்ட குறைந்தபட்சத் தேவையான அறிவியல் கருத்துக்கள் இருக்கவேண்டும். அனைவருக்கும் இருக்கவேண்டிய அவசியமில்லை, ஆனால் பரவலாக அறிவுசார் படைப்புகளை உருவாக்க நினைப்பவர்களிடம் இருக்கவேண்டும். இரண்டாவது, பண்பாட்டு விழுமியங்கள் அறிவைத் தேடுவதிலும் படைப்பதிலும் சுதந்திரமும் ஊக்கமும் அளிக்கவேண்டும். இவ்விரண்டும் இருந்தால் அறிவு வளர்ச்சி மளமளவென்று கட்டுக்கடங்காமல் ( exponential growth) தானாக ஏற்படும். இனி இவற்றை விரிவாகப் பார்ப்போம்
Explanation:
I am too a Thamizhan
from Karur
really
follow me