கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்து கட்டபொம்மன் நடத்திய வீரதீரப் போர்கள் பற்றி ஒரு கட்டுரை வர
Answers
Answered by
6
கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்து கட்டபொம்மன் நடத்திய வீரதீரப் போர்கள்
- வீரபாண்டிய கட்டபொம்மன் தன் 30வது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராக பொறுப்பேற்றார்.
- கட்டபொம்மனுக்கும் கம்பெனி நிர்வாகத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
- படை பலத்துடன் பாளையப் பகுதியில் கம்பெனி நிர்வாகம் வரி வசூல் செய்தது.
- இது கட்டபொம்மனுக்கு பெரும் ஆத்திரத்தினை உண்டாக்கியது.
- 1788 ஆம் ஆண்டு வரை கட்டபொம்மனிடம் இருந்து நிலவரி நிலுவைத் தொகை 3310 பகோடாக்கள் இருந்தது.
- வசூல் செய்ய கம்பெனியால் நியமிக்கப்பட்ட ஜாக்சன் இராமநாதபுரத்தில் கட்ட பொம்மனை வரவழைத்து காக்க வைத்து அவமானப்படுத்தினார்.
- கட்டபொம்மன் தன் அமைச்சர் சிவ சுப்ரமணியத்துடன் தப்பிச் செல்ல முயன்றபோது நடந்த மோதலில் சிவசுப்ரமணியம் கைது செய்யப்பட்டார்.
- கம்பெனி நிர்வாகத்திடம் கட்டபொம்மன் ஜாக்சன் தன்னை அவமானப்படுத்தியதாக புகார் கூறினார்.
- பின்னர் கட்டபொம்மன் சிவகங்கை மருது பாண்டியர்களின் தென்னிந்திய கூட்டமைப்பில் இணைந்து ஆங்கிலேயரை எதிர்க்க முடிவெடுத்தார்.
- 1799 ஆம் ஆண்டு மே மாதம் வெல்லெஸ்லி பிரிவின் ஆணைப்படி, திருவிதாங்கூர் படை மற்றும் கம்பெனி படை இணைந்து கட்டபொம்மனை சரணடைய கூறியது.
- புதுக்கோட்டைக்கு தப்பிய ஓடிய கட்டபொம்மன் எட்டையபுரம் மற்றும் புதுக்கோட்டை பாளையக்காரர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு, சகப் பாளையக்காரர்களின் முன்னிலையில் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள கயத்தாறின் பழைய கோட்டையின் முன்பு இருந்த புளிய மரத்தில் தூக்கிலிடப்பட்டார்.
Similar questions