சுயராஜ்ஜியம் வேண்டியோர் மற்றும் மாற்றத்தை விரும்பாதவர்கள் இடையே மோதல் ஏன் இருந்தது?
Answers
Answered by
0
காங்கிரஸ் பிளவு
- காங்கிரஸ் மாற்றத்தினை விரும்புவோர், மாற்றத்தினை விரும்பாதவர்கள் என இரண்டாக பிரிந்தது.
- காங்கிரஸில் இருந்த மோதிலால் நேரு, சி.ஆர். தாஸ் உள்ளிட்ட மாற்றத்தினை விரும்பும் பிரிவினர் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு செல்வதை விரும்பினர்.
- மாற்றத்தினை விரும்பாத பிரிவினர் சட்டமன்ற புறக்கணிப்பினை தொடர விரும்பினர்.
- சட்டமன்றத்திற்கு செல்வதை வல்லபாய் பட்டேல், சி. இராஜாஜி, கஸ்தூரி ரங்கர், M.A. அன்சாரி ஆகியோர் காந்தியத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் மற்ற சிலருடன் இணைந்து எதிர்த்தனர்.
- சுயராஜ்ஜியம் வேண்டியோர் மற்றும் மாற்றத்தை விரும்பாதவர்கள் இடையே மோதல் சட்டமன்றத்தில் பங்கேற்பது தொடர்பாக இருந்தது.
- ராஜாஜியின் சட்டமன்றத்தினை புறக்கணிப்பது என்ற கருத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு ஆகியோரால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சுயராஜ்ஜியக் கட்சி உருவாக்கப்பட்டது.
Similar questions
Sociology,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
Physics,
10 months ago