தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களைப் பற்றி எழுதவும்.
Answers
தமிழ் நாட்டின் நீர் ஆதாரங்கள்
மேற்பரப்பு நீர் ஆதாரங்கள்
- தமிழ் நாட்டில் ஏறத்தாழ 24,864 மில்லியன் கனமீட்டர் அளவிற்கு மொத்த மேற்பரப்பு நீரின் அளவு உள்ளது.
- தமிழகத்தில் 17 பெரிய ஆற்று வடி நிலப்பகுதிகள், 81 நீர்த்தேக்கங்கள் மற்றும் 41,262 ஏரிகள் உள்ளன.
- மேற்பரப்பு நீர் மூலம் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் மூலம் 24 இலட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன.
நிலத்தடி நீர் ஆதாரங்கள்
- மழை நீரானது பூமியின் உள் சென்று தங்கி இருக்க, அதனை கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறு (போர்வெல்) மூலம் பெறப்படும் நீர் நிலத்தடி நீர் என அழைக்கப்படுகிறது.
- தமிழ் நாட்டில் 22,433 மில்லியன் கன மீட்டர் அளவு நிலத்தடி நீர் உள்ளது.
- இதில் 60 % நீரானது மறுவூட்டம் மூலம் கிடைக்கும் நீர் ஆகும்.
Explanation:
நீர் ஆதாரங்கள் என்றால் தண்ணீர் பெறும் மூலங்கள் ஆகும். அவைகள் அனைத்து மனிதர்களுக்குப் பயனுள்ளவையாகவோ, அல்லது இயல்திறம் கொண்ட தாகவோ இருக்கும். நீரின் பயன்பாடுகளில் உள்ளடங்குவன யாதெனில் வேளாண்மை,தொழில்துறை, குடும்ப அமைப்பு,ஓய்வு நேர பொழுதுபோக்கு, மற்றும் சுற்றுப்புறம் சூழல்பற்றிய அனைத்து நடவடிக்கைகளுமாகும். நடைமுறையில் இத்தகு மனிதப் பயன்பாடுகள் யாவிற்கும் சுத்தநீர்தேவையானதாகும்.
இயற்கையான ஈரநிலம்
[1] நிலத்திலிருந்து பெறும் நீரில் 97% உப்பு நீராகவே உள்ளது. 3% மட்டுமே புதுப்புனலாக இருக்கும் அதிலும் மூன்றில் இருபங்குகளுக்கும் சிறிததிகமாக பனிப் பாறைகளில் மற்றும் துருவப்பனிக்கவிகைளில் உறைந்திருக்கும்.[1] மிஞ்சியுள்ள உறையாத சுத்தநீர்தான் நிலத்தடி நீராகக் கண்டெடுக்கப் படுகின்றது. அதிலும் ஒரு சிறிய பின்னம் நிலத்தின்மேல் அல்லது காற்றில் இருக்கும்.[2]
சுத்தநீர் மறுபுதுப்பிக்கும் மூல ஆதாரமாகும் இருந்தபோதிலும், உலகின் சுத்த புதிய நீர்வழங்கல் படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகின்றது. நீரின் தேவை அதன் வழங்கலைக் காட்டிலும் உலகின் பல பகுதிகளில் விஞ்சியுள்ளது. உலக மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்க, நீரின் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. உயிரின [[வாழ்க்கைச் சூழல் அமைப்புகளின் சேவைகளுக்கென்று நீரினைப்|வாழ்க்கைச் சூழல் அமைப்புகளின் சேவைகளுக்கென்று நீரினைப்]]பேணிப் பாதுகாக்கும் உலகளாவிய முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு இருபதாம் நூற்றாண்டில் சமீப காலமாகத்தான் தோன்றி வருகின்றது அதுவும் கிட்டத்தட்ட பாதியளவு ஈரநிலங்கள் மதிப்புமிகும் சுற்றுப்புறச் சூழல் சேவைகள் உடன் இழப்புக்குள்ளாகியதால் அவ்விழிப்புணர்வு பெருகியுள்ளது. வளமார் சுத்தநீர் உயிரின வாழ்க்கைச் சூழல் அமைப்புகள் யாவும் நடப்பு நிலையில் குன்றி வருகின்றன அப்படி குறைந்து வருவது கடல் மற்றும் நில- உயரின வாழ்க்கைச் சூழல்அமைப்புகளைவிட வேகமாக இருப்பது கண்கூடு.[3] நீர்ப்பயனாளிகளுக்கு நீரின் ஆதாரங்களைப் பங்கீடு செய்ய வேண்டிய உருவரைச்சட்டமே (அப்படி ஒரு உருவரைச்சட்டம் இருக்குமானல்) நீர் உரிமைகள்என்று வழங்கப்படும்.