தாங்கியிருப்பு என்பது உணவுப் பங்கு தானியங்கள் அதாவது கோதுமை மற்றும் அரிசியை __________ மூலம் அரசாங்கம் கொள்முதல் செய்கிறது. அ) FCI ஆ) நுகர்வோர் கூட்டுறவு இ) ICICI ஈ) IFCI
Answers
Answered by
0
FCI (இந்திய உணவுக் கழகம்)
- இந்திய உணவுக் கழகத்தின் (FCI) மூலமாக கோதுமை மற்றும் அரிசி ஆனது உபரி உற்பத்தி இருக்கும் மாநிலங்களில் விவசாயிகளிடம் இருந்து அரசினால் வாங்கப்படுகிறது.
- பருவ காலத்தின் தொடக்கத்தில் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price) அறிவிக்கப்படுகிறது.
- அதன் பின்னர் அரசு இந்திய உணவுக் கழகத்தின் (FCI) மூலமாக அறுவடை செய்யப்பட்ட தானியங்களை கொள்முதல் செய்கிறது.
- இது தாங்கியிருப்பு என அழைக்கப்படுகிறது.
- அறுவடை காலத்தில் விவசாயிகளிடம் இருந்து பெற்ற உணவுத் தானியங்களை சேமிக்க மிகப் பெரிய சேமிப்புக் கிடங்கினை இந்திய உணவுக் கழகம் அமைத்து உள்ளது.
- சேமிப்பு கிடங்கில் உள்ள உணவுத் தானியங்களை ஆண்டு முழுவதும் வழங்க இந்திய உணவுக் கழகம் வழி வகுக்கிறது.
Answered by
0
FCI
இந்திய உணவுக் கழகம் என்பது இந்திய அரசால் உருவாக்கப்பட்ட மற்றும் நடத்தப்படும் ஒரு அமைப்பாகும். இது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சின் கீழ் உள்ள ஒரு சட்டபூர்வமான அமைப்பாகும். அதன் உயர் அதிகாரி தலைவராக நியமிக்கப்படுகிறார். இது 1965 ஆம் ஆண்டில் சென்னையில் அதன் ஆரம்ப தலைமையகத்துடன் அமைக்கப்பட்டது. பின்னர் இது புது தில்லிக்கு மாற்றப்பட்டது. இது மாநிலங்களின் தலைநகரங்களில் பிராந்திய மையங்களையும் கொண்டுள்ளது. மாநிலத்தின் முக்கிய பகுதிகளும் மாவட்ட மையங்களாக செயல்படுகின்றன....
Similar questions