முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால் - நித்தம்
அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு
இணைகிடந்த தேதமிழ் ஈண்டு.
வினாக்கள்
1. முத்தமிழ் என்பது
2. ஐம்பெருங்காப்பியங்கள் என்னென்ன?
3. இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர்
4. சந்தக்கவிமணி என குறிப்பிடப்படுபவர்
5. துய்ப்பது என்பதன் பொருள்----
Answers
Answer:
அணை கிடந்தே சங்கத்தவர் காக்க ஆழிக்கு இணை கிடந்தே தமிழ் ஈண்டு இப்பாட லை இயற்றியவர் யார்
Answer:
1. மூன்று
2. சிலப்பதிகாரம்,மணிமேகலை,சீவக சிந்தாமணி,வளையாபதி, குண்டலகேசி
3.சிலேடை
4. திரு தமிழழகன்
5. நுகர்ச்சி
Explanation:
1. முத்தமிழ் என்பது இரண்டு வார்த்தைகளாகும், அதாவது மூன்று தமிழ். தமிழர்கள், கலைகளிலும் மற்றும் கேளிக்கைளிலும் (பொழுதுபோக்கு) மிகவும் செழிப்பான வரலாற்றைக் கொண்டவர்கள். அவர்கள் கலை, கேளிக்கைகளில் - இயல் (இலக்கியம் அல்லது இயல்பு), இசை மற்றும் நாடகம் என்று பிரித்தனர் . முத்தமிழின் சிறப்புகளைப் பற்றிச் சிலப்பதிகாரம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இயல்
- இயல் என்றால் இரண்டு அர்த்தங்கள் உள்ளன. ஓர் அர்த்தம் இயல்பு; இன்னொரு அர்த்தம் தமிழ் மொழி, மற்றும் அதன் இலக்கியம் ஆகும். நான் தமிழ் மொழியியல் பற்றி விளக்கப்போகிறேன்.
இசை
- சங்க காலத்து இசை, தமிழ் இசையின் வரலாற்று முன்னோடியாகும்[4]. பண்டைய காலத்தில் புத்தகத்தில் இருந்த கவிதைகள் இசையோடு சேர்த்துப் பாடல்களாக உருவாக்கப்பட்டன. அதை பத்துபாட்டு மற்றும் எட்டுத்தொகை நூல்களில் காணலாம்.
நாடகம்
- தமிழ் நாடக வரலாறு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்திருக்கிறது. பல்வேறு விதமான நாடகங்கள் இருக்கின்றன, அவற்றில் சில, தெருக்கூத்து மற்றும் மேடை அரங்கு நாடகங்கள் ஆகும். பண்டைய காலத்தில், பொழுதுபோக்குவதற்காக நாடகங்கள் உருவாக்கப்பட்டன. பல வேடங்கள் போட்டு நடித்தார்கள். அரசியல் பிரச்சினைகள், திருவிழாக்கள், சோக நிகழ்வுகள் பற்றிப் பெரும்பான்மையான நாடகங்கள் இருந்தன. நவீன காலத்தில், வெள்ளித்திரை பிரபலமானதால் சில கிராமங்களில் மட்டுந்தான் இன்றும் தெருக்கூத்து நடக்கிறது. தற்பொழுது, பெரும்பான்மையான நாடகங்கள் அழிந்துவருகின்றன.
- இயல், இசை, நாடகங்கள் மூலம் நாம் நம் தாய்மொழி தமிழைக் கற்கிறோம். சில சிறப்பான நூல்கள் (திருக்குறள்) மூலம் நாம் எப்படி நன்றாக வாழ்வது என்று அறிகிறோம். நம் கலாசாரத்தைப் பற்றி அறிந்துகொள்கிறோம். நாம் நம் முத்தமிழின் சிறப்புகளை அறிந்து, அனுபவிக்கவேண்டும். தமிழ் ஒரு அருமையான மொழி என்று உணரவேண்டும். வரும் தலைமுறைக்கு நம் தமிழ் மொழியை இயல், இசை, நாடகங்களால் அறிய வைக்கலாம், புரிய வைக்கலாம் மற்றும் அனுபவிக்க வைக்கலாம் என்பது என் கருத்து.
2. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பவற்றோடு ஒரு ஒப்பில்லாத் தலைவனையும் தலைவியையும் கொண்டு அவர்களின் முழு வரலாற்றையும் கூறுவது ஐம்பெருங்காப்பியம் எனப்படும். அந்த வகையில் தமிழிலே ஐந்து காப்பியங்கள் இனங்காணப்பட்டன. இவற்றின் ஆசிரியர்களையும் இப்பெருங்காப்பியங்கள் தொடர்பான சில விளக்கங்களை இங்கு நோக்கலாம்.
ஐம்பெருங்காப்பியங்களும் அவற்றின் ஆசிரியர்களும்
01. சிலப்பதிகாரம் - ஆசிரியர் - இளங்கோவடிகள்
கோவலன் கண்ணகி கதையைக் கூறுவது. இது மூன்று பெருங்காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. புகார் காண்டத்தில் சோழ நாட்டுப் பெருமையையும் பாண்டிய நாட்டுப் பெருமையை மதுரைக் காண்டத்திலும் சேர நாட்டுப் பெருமையை வஞ்சிக் காண்டத்திலும் வகைப்படுத்தியுள்ளார். இதுவே தமிழில் தோன்றிய முதல் பெருங்காப்பியமாகும்.
02. மணிமேகலை - ஆசிரியர் - சீத்தலைச் சாத்தனார்
சிலப்பதிகாரத்தை தொடர்ந்து எழுந்த காப்பியம் மணிமேகலையாகும். காவியத் தலைவியான மணிமேகலையை அடிப்படையாகக் கொண்டு எழுந்த இந்நூலானது இவள் துறவு பூண்டு புத்த சமயத்தை சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையினை விரிவாகக் கூறுகிறது. அத்தோடு கோவலன் மாதவிக்கு பிறந்தவளே மணிமேகலை ஆவாள். ஆகவே சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகவும் இந்நூல் கருதப்படுவதால், சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன இரட்டைக் காப்பியம் எனப்படுகின்றன.
03. சீவக சிந்தாமணி - ஆசிரியர் - திருத்தக்க தேவர்
காப்பியத் தலைவனான சீவகனின் பிறப்பு, இளமை, காதல், வீரம், பற்றியும் அவன் வீடுபேறு அடைந்தமை பற்றியும் இந்நூல் விரிவாகக் கூறுகின்றது.
04. வளையாபதி
சமண மதச் சார்புடைய நூல் வளையாபதி ஆகும். இந்நூல் தற்போது முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை.
05. குண்டலகேசி
பௌத்த மதச் சார்புடைய நூல் குண்டலகேசி ஆகும். இந்நூலும் தற்போது முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை.
3. ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுறமொழிதல் அணி எனப்படும். இதனைச் சிலேடையணி என்றும் அழைப்பர். ஒரு சொல் பிரிபடாமல் தனித்துநின்று பல பொருள் தருவது செம்மொழிச் சிலேடை என்றும் , சொற்றொடர் பல வகையாகப் பிரிக்கப்பட்டுப் பல பொருள்களைத் தருவது பிரிமொழிச் சிலேடை என்றும் பெயர் பெறும்.
4. பாவலரேறு பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 – சூன் 11, 1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர்.குழுமத்தில் பலருக்கும் மிகவும் அறிமுகமான சந்தக்கவிமாமணி திரு தமிழழகன் அவர்களின் கவிதைகளை தொடராக இங்கு இடலாம் என நினைக்கிறேன். திரு தமிழழகன் அவர்கள் தம் கவிதைகளை இணையத்தில் இடும்படியாக என்னைக் கேட்டுக்கொண்டார். அதன்படி, அவர்தம் கவிதைகளில் சிலவற்றைத் தொகுத்து இடுகிறேன். கவிதைகளை இடுமுன், அவரைப் பற்றிய குறிப்பையும் இவண் இடுகிறேன்.
5. துய்ப்பது என்பதன் பொருள் நுகர்ச்சி