இலக்கியங்கள் காலம் கடந்தும்
அழியாமல் வாழ்வதற்கு
காரணம் என்று விறீர்கள்
எனன
கருது
Answers
இலக்கியம் மொழி காலம் கடந்து வாழ்வதற்கான காரணம் எழுத்து மொழியாகும் ஏனென்றால் முன்னோர்கள் எழுதி வைத்து சென்றாலே தான் நம்மால் இன்றும் பழைய காலத்து நூல்களான திருக்குறள் போன்ற நூல்களை இன்னும் படித்து அதிலுள்ள நல்ல விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது
Answer:
இலக்கு + இயம் = இலக்கியம். இலக்கியங்கள் நம் வாழ்வை வளப்படுத்த, வழிகாட்டக்கூடிய ஒளிவிளக்குகளாகத் திகழ்கின்றன. இலக்கியங்கள் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்றன. அற இலக்கியங்கள் வழங்கும் அற்புதமான கருத்துகளைக் கடைப்பிடித்தால் நம் வாழ்வு பிறரால் பாராட்டப்படும் தன்மையுடையதாக விளங்கும்.
இலக்கியங்கள் வழங்குகின்ற கருத்துகள் எக்காலமும் நிலைத்து நிற்கின்ற கருவூலமாகத் திகழ்கின்றன. ஒவ்வொரு இலக்கியமும் ஒவ்வொரு உண்மையை பறைசாற்றுகின்றன.
மணிமேகலை பசிப்பிணி அகற்றும் மாண்பை எடுத்துரைக்கிறது. சிலப்பதிகாரம் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்ற உண்மைகளை உலகிற்கு எடுத்துரைக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு இலக்கியமும் தரும் உண்மையான கருத்துகளைக் கடைப்பிடித்து நாம் வாழ்வின் உன்னத நிலையை அடைவோம்.
இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்ற நிலை கடந்து அறிவியல் தமிழ், கணினி தமிழ், இணையத் தமிழ், ஊடகத் தமிழ் என்று மொழி வளர்ந்து கொண்டே வருகிறது. இத்தகு வளர்ச்சி தமிழ்மொழியின் உச்சநிலை வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது என்பதைக் காட்டுகிறது. பலநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்கள் எழுத்து வடிவில் இருப்பதால்தான் நம்மால் இன்றும் படிக்க முடிகிறது.
#SPJ2