கர்நாடகப் போர்களில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட செலவினங்களுக்காக கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து கடனாகப் பணத்தை வாங்கியவர் யார்? அ) வேலுநாச்சியார் ஆ) பூலித்தேவர் இ) ஆற்காட்டு நவாப் ஈ) திருவிதாங்கூர் மன
Answers
Answered by
0
ஆற்காட்டு நவாப்
- கர்நாடகப் போர்களில் ஈடுபட்ட போது ஏற்பட்ட செலவிற்காக ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியிடம் கடனாகப் பணத்தை வாங்கியவர் ஆற்காட்டு நவாப் ஆவார்.
- ஆற்காடு நவாப் கடனைத் திரும்ப செலுத்தும் நிலையினை கடந்ததால், தெற்கத்திய பாளையக்காரர்களிடம் இருந்து வரிவசூல் செய்யும் உரிமை கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்டது.
- ஆனால் 60 தலைமுறைகள் நிலத்தின் மீது கொண்டிருந்த உரிமையினை எடுத்துரைத்த பல பாளையக்காரர்கள் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு வரி செலுத்த மறுத்தார்கள்.
- ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு வரி செலுத்த மறுத்த பாளையக்காரர்களை கிளர்ச்சியாளர்கள் என கூறிய கம்பெனி, இவர்கள் நாட்டின் அமைதி மற்றும் ஒழுங்கிற்கு கேடு விளைவிப்பவர்கள் என்று குற்றம் சுமத்தியது.
Similar questions