சிவசுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்? அ) கயத்தாறு ஆ) நாகலாபுரம் இ) விருப்பாட்சி ஈ) பாஞ்சாலங்குறிச்ச
Answers
Answered by
1
நாகலாபுரம்
- தன் தந்தை ஜெக வீரபாண்டிய கட்டபொம்மனின் இறப்பிற்குப் பிறகு தனது முப்பது வயதில் பாஞ்சாலக்குறிச்சியின் பாளையக்காரராக வீரபாண்டிய கட்டபொம்மன் பதவி ஏற்றார்.
- அவரின் சகோதரர்கள் ஊமைத்துரை மற்றும் செவத்தையா மற்றும் அமைச்சர் சிவ சுப்ரமணியனார் ஆவார்.
- ஆங்கிலேய படைகளுக்கும் பாளையக்காரர்களுக்கும் கள்ளர்பட்டியில் நடந்த மோதலின் போது வீரபாண்டிய கட்டபொம்மன் தப்பி புதுக்கோட்டைக்குச் சென்றார்.
- ஆனால் சிவ சுப்ரமணியனார் கைது செய்யப்பட்டார்.
- ஆங்கிலேய அதிகாரிகள் வீரபாண்டிய கட்டபொம்மனின் தலைக்கு ஒரு வெகுமதியை நிர்ணயித்தனர்.
- இதன் காரணமாக எட்டையபுரம் மற்றும் புதுக்கோட்டை அரசர்களால் காட்டிக் கொடுக்கப்பட்ட கட்டபொம்மன் இறுதியாக பிடிபட்டார்.
- அவரின் அமைச்சர் சிவசுப்ரமணியனார் நாகலாபுரம் என்ற இடத்தில் 1799 ஆம் ஆண்டு செப்டம்பர் 13ல் தூக்கிலிடப்பட்டார்.
Similar questions