தீரன் சின்னமலை அ) தீரன் சின்னமலை எப்போது பிறந்தார்? ஆ) ‘சின்னமலை’ என்ற பட்டப்பெயரை அவர் எவ்வாறு பெற்றார்? இ) திப்பு சுல்தானின் திவானின் பெயர் யாது? ஈ) அவர் எங்கு, ஏன் தூக்கிலிடப்பட்டார்?
Answers
Answered by
1
Answer:
what game you writen.....??????
Answered by
2
தீரன் சின்னமலை
- தீரன் சின்னமலை தீர்த்தகிரி என்ற பெயருடன் பழையக்கோட்டை மன்றாடியார் பட்டம் பெற்ற மதிப்புமிக்க குடும்பத்தில் 1756 ஆம் ஆண்டு பிறந்தார்.
- மைசூர் சுல்தானின் கட்டுப்பாட்டில் இருந்த கொங்குப்பகுதியில் திப்புவின் திவான் முகம்மது அலி என்பவரால் வரி வசூலிக்கப்பட்டது.
- அவ்வாறு ஒரு முறை திவான் வரிப்பணத்தினை வசூலித்து மைசூருக்குச் செல்லும் போது வழிமறித்த தீர்த்தகிரியால் வரிப்பணம் பறித்துக் கொள்ளப்பட்டது.
- சிவமலைக்கும், சென்னிமலைக்கு இடையே உள்ள சின்னமலையே வரிப்பணத்தினை பறித்ததாக மைசூர் சுல்தானிடம் போய் சொல் என்று தீர்த்தகிரி திப்புவின் திவான் முகம்மது அலியிடம் கூறினார்.
- அதன் பிறகே தீர்த்தகிரி தீரன் சின்னமலை என அழைக்கப்பட்டார்.
- மைசூர் திப்பு சுல்தானின் திவானின் பெயர் முகம்மது அலி ஆகும்.
- பிரிட்டிஷ் அரசினை எதிர்த்ததால், 1805 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ல் சங்ககிரி கோட்டையின் உச்சியில் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்டார்.
Similar questions