நீல் தர்ப்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்? அ) தீன பந்து மித்ரா ஆ) ரொமேஷ் சந்திர தத் இ) தாதாபாய் நௌரோஜி ஈ) பிர்சா முண்டா
Answers
Answered by
0
தீன பந்து மித்ரா
இண்டிகோ கிளர்ச்சி
- 1859 ஆம் ஆண்டு தொடங்கிய இண்டிகோ கிளர்ச்சி வேலை நிறுத்தமாக தொடங்கியது.
- அதாவது இனி இண்டிகோவை பயிரிடப் போவதில்லை என வங்களாத்தின் நடியா மாவட்டத்தின் ஒரு கிராமத்தினை சார்ந்த விவசாயிகள் மறுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
- இது இண்டிகோ பயிரிடப்பட்ட மற்ற வங்காள மாவட்டங்களுக்கும் பரவியது.
- வேலை நிறுத்தமாக இருந்த போராட்டம் வன்முறையாக மாறியது.
- இதில் இந்து மற்றும் முஸ்லிம் விவசாயிகள் ஈடுபட்டனர்.
- ஆண்களும் பெண்களும் குடங்கள் மற்றும் உலோகத்தட்டுக்களை ஆயுதமாக ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கல்கத்தாவில் இருந்த அப்போதைய பத்திரிக்கையாளர்கள் ஆங்கிலேய முகவர்களின் கொடுமைகள் குறித்து எழுதினார்கள்.
- தீன பந்து மித்ரா நீல் தர்ப்பன் (இண்டிகோவின் கண்ணாடி) என்ற தலைப்பில் ஒரு நாடகத்தை எழுதினார்.
Similar questions