ஆங்கிலேய இந்தியாவில் விவசாயிகளின் கிளர்ச்சி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
Answers
Answered by
1
ஆங்கிலேய இந்தியாவில் விவசாயிகளின் கிளர்ச்சிகளின் வகைகள்
மறு சீரமைத்தலுக்கான கிளர்ச்சிகள்
- பழைய முறைமைகள் மற்றும் பழைய சமூக உறவுகளை நிலை நிறுத்தும் முயற்சிகள் தொடர்புடையதாக மறு சீரமைத்தலுக்கான கிளர்ச்சிகள் உள்ளது.
சமய இயக்கங்கள்
- சமயச் சிந்தனைகளின் அடிப்படையில் சமய இயக்கங்களுக்கு தலைமை வகித்த சமயத் தலைவர்கள் சமூகத்தினை சீரமைத்து, அதன் மூலம் உள்ளூர் மக்களின் விடுதலைக்காகப் போராடினார்கள்.
சமூகக் கொள்ளை
- சமூகக் கொள்ளை இயக்கங்களின் தலைவர்கள் பாரம்பரிய உயர்குடியினர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் குற்றவாளிகளாக கருதப்பட்டனர்.
- ஆனால் அந்த சமூகத்தினை சார்ந்த மக்களால் தங்களுடைய மேம்பாட்டுக்காக உழைத்த நாயகர்களாகவும், சாதனையாளர்களாகவும் கருதப்பட்டனர்.
மக்களின் கிளர்ச்சி
- திடீரெனவும், தலைவர்கள் இல்லாமலும் நடைபெறும் புரட்சி இயக்கங்களே மக்களின் கிளர்ச்சி ஆகும்.
Similar questions