India Languages, asked by anjalin, 10 months ago

இந்தியாவின் பிரிவினைக்குப் பின்னால் இருந்த காரணங்களை விவாதிக்கவும்.

Answers

Answered by Anonymous
0

Answer:

இந்தியப் பிரிவினை (Partition of India, தேவநாகரி: हिंदुस्तान की त‌‌‌‍क़्सीम) என்பது 1947இல் ஆகஸ்ட் 14 மற்றும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரித்தானிய இந்தியப் பேரரசை[1] ஆங்கிலேயர்கள் மத ரீதியாகப் பிரித்தமையைக் குறிக்கும். இந்த நிகழ்வு காரணமாக இந்திய ஒன்றியம் (பின்னர் இந்தியக் குடியரசு), பாக்கித்தான் மேலாட்சி மற்றும் பூடான் ஆகிய தனிநாடுகள் உருவாக்கப்பட்டன[2].

இப்பிரிவினை இந்திய விடுதலைச் சட்டம் 1947 இல் அறிவிக்கப்பட்டு, பிரித்தானிய இந்தியா கலைக்கப்படக் காரணமாய் அமைந்தது[3] இப்பிரிவினையால் சில நூறாயிரம் பொருட் சேதம் மட்டுமன்றி 12 .5 மில்லியன் மக்கள் இடம் பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.[4][5][6]. இம்மூர்க்கப் பிரிவினை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பரஸ்பர சந்தேகத்தை விதைத்தது. இந்த சந்தேகம் இந்நாள் வரை இவ்விரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவிற்கு இடைஞ்சலாய் இருந்து வருகின்றது.[7]

முன்னாள் பஞ்சாப் மாநிலம் இந்தியப் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தான் பஞ்சாபாக பிரிந்தது[8]. வங்காள மாகாணமும் மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு பாகிஸ்தானாக பிரிந்தது. மேலும் தொடர்வண்டி துறை, இராணுவம், மைய கருவூலம் போன்ற சொத்துகளும் பிரிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் வரலாற்றில் மிக வேகமான மக்கள் இடமாற்றம் நடந்தது. மொத்தத்தில் 17.9 மில்லியன் மக்கள் இட மாற்றியுள்ளனர், ஆனால் இதில் 14.5 மில்லியன் மக்கள் மட்டும் தனது செல்லிடத்தை சேர்ந்தனர்.

தெற்காசியாவில் இந்தியா மற்றும் பாக்கித்தான் ஆகிய நாடுகளை மட்டும் இந்த நிகழ்வு பாதிப்படைய வைத்தது. பிரித்தானிய இந்திய பேரரசில் பர்மா, மாலைதீவுகள், இலங்கை போன்ற வேறு நாடுகள் தனியாக விடுதலை பெற்றன.1930-களுக்கு முன்பு வரை இந்தியப்பிரிவினைக் குறித்து யாரும் கருதவில்லை. இந்திய துணைகண்டத்தின் மொத்த விடுதலையையே அனைவரும் எதிர் நோக்கியிருந்தனர். முஸ்லீம் இன மக்களுக்கு தனி தேசம் வேண்டும் என முதன் முதலில் குரல் கொடுத்தவர் இக்பால் ஆவார். அதன் பின் அத்தேசம் வேண்டுமென ஆதரித்தவர் சவுத்ரி ரகமத் அலி என்பவராவார். அப்படி பிரிக்கப்படும் பகுதிக்கு பாகிஸ்தான் எனும் பெயர் இட்டவரும் சவுத்ரி ரகமத் அலி ஆவார்

Answered by steffiaspinno
0

இந்தியாவின் பிரிவினைக்குப் பின்னால் இருந்த காரணங்க‌ள்  

  • 1920 ஆ‌ம் ஆ‌ண்டுக‌ளி‌‌ல் இ‌ந்து ம‌ற்று‌ம் மு‌ஸ்‌லி‌ம் ‌ம‌க்‌களிடையே ஏ‌ற்ப‌ட்ட மோத‌ல்.
  • மு‌ஸ்‌லி‌ம் லீ‌‌‌க் ம‌த்‌திய ச‌ட்ட ம‌ன்ற‌த்‌தி‌ல் மு‌ஸ்‌லி‌ம் ம‌க்களு‌க்கு இட ஒது‌க்‌கீடு வே‌ண்டு‌ம் என வ‌லியுறு‌த்தது.
  • 1932 ஆ‌ம் ஆ‌ண்டு வெ‌ளி வ‌ந்த இரா‌ம்சே மெ‌க் டொனா‌ல்டோ‌வி‌ன் வகு‌ப்பு வாத அ‌றி‌க்கை.
  • முஹ‌ம்மது இ‌க்பா‌ல் இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி வ‌ந்த த‌ன் ‌நிலை‌ப்பா‌ட்டினை மா‌ற்‌றி முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்.
  • இ‌ந்து‌க்க‌ளிட‌ம் மு‌ஸ்‌லி‌ம்க‌ள் த‌ங்களது அனை‌த்து அர‌சிய‌‌ல் அ‌திகா‌ர‌ங்களையு‌ம் இழ‌ந்து ‌விடுவ‌ர் என கூ‌றிய ‌ஜி‌ன்னா‌ 1940 ஆ‌ம் ஆ‌ண்டு முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும் என வ‌லியுறு‌த்‌தினா‌ர்.
  • 1946‌ல் நட‌ந்த தே‌ர்த‌லி‌ல் தனது த‌னி‌த் தொ‌கு‌தியி‌ல் மு‌ஸ்‌லி‌ம் லீ‌‌‌க் வெ‌‌ற்‌றி பெ‌ற்றது.
  • மு‌ஸ்‌‌‌‌‌லிம் லீ‌‌க்‌கி‌ன் தலைவ‌ர் முகமது அ‌லி ‌ஜி‌ன்னா‌ 1946 ஆ‌ம் ஆ‌‌ண்டு ஆ‌க‌ஸ்‌ட் 16 ஆ‌ம் தே‌தி‌யினை நேரடி நடவடி‌க்கை நாளாக அ‌றி‌வி‌த்தா‌ர்.
  • 1947 ஆ‌ம் ஆ‌ண்டு ஜூலை 18‌ல் ‌விடுதலை ச‌ட்ட‌த்‌தினை இய‌ற்‌றி ‌பி‌ரி‌ட்டி‌ஷ் பாராளும‌ன்‌ற‌ம் இந்‌தியாவை இ‌ந்‌தியா பா‌‌கி‌ஸ்தா‌ன் என ‌பி‌ரி‌த்து ‌விடுதலை வழ‌ங்‌கியது.
  • மே‌ற்க‌ண்ட காரண‌ங்களா‌ல் இ‌ந்‌திய ‌பி‌ரி‌வினை ஏ‌ற்ப‌ட்டது.  
Similar questions