கூற்று: நீதிக்கட்சி தன்னாட்சி இயக்கத்தை எதிர்த்தது. காரணம்: தன்னாட்சி இயக்கம் பிராமணர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கிவிடுமென நீதிக்கட்சி அஞ்சியது. அ) கூற்றும், காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல ஆ) கூற்று சரி, காரணம் தவறு இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு ஈ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
Answers
Answered by
0
Answer:
ஈ. கூற்று காரணம் ஆகிய இரண்டும் சரி
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
தென்னிந்திய நல உரிமைச் சங்கம்
- 1916 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி டாக்டர் நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டி.எம். நாயர் மற்றும் அலமேலு மங்கை தாயாரம்மாள் உள்ளிட்ட 30 முக்கிய பிராமணர் அல்லாத தலைவர்கள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தினை உருவாக்கினர்.
- தென்னிந்திய நல உரிமைச் சங்கம் அல்லது நீதிக்கட்சியின் முக்கிய நோக்கம் அரசு பணியிடங்களில் பிராமணர் அல்லாதோருக்கு இட ஒதுக்கீடு மற்றும் பிரதிநிதித்துவ அமைப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்வது ஆகும்.
- தன்னாட்சி இயக்கம் பிராமணர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கக் கூடுமென நீதிக்கட்சி அஞ்சியதால், நீதிக்கட்சி தன்னாட்சி இயக்கத்தைப் பிராமணர்களின் இயக்கம் என எதிர்த்தது.
- மேலும் காங்கிரஸ் கட்சியினை பிராமணர்களின் கட்சி என கூறியது.
Similar questions