திருநெல்வேலி எழுச்சி பற்றி ஒரு குறிப்பு வரைக.
Answers
Answered by
3
திருநெல்வேலி எழுச்சி
- வ.உ.சி. மற்றும் சுப்பிரமணிய சிவாவின் முயற்சியினால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் நூற்பாலைத் தொழிலாளர்கள் அணி திரண்டனர்.
- 1908 ஆம் ஆண்டு நடந்த கோரல் நூற்பாலை வேலை நிறுத்தத்திற்கு வ.உ.சி. தலைமை தாங்கினார்.
- பிபின் விடுதலையடைந்ததை கொண்டாட பொதுக் கூட்டத்தினை ஏற்பாடு செய்ததற்காக வ.உ.சி. மற்றும் சுப்பிரமணிய சிவா கைது செய்யப்பட்டனர்.
- இரு தலைவர்கள் மீது அரச துரோகம் சாட்டப்பட்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.
- வ.உ.சிக்கு இரண்டு ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டன.
- வ.உ.சி. மற்றும் சுப்பிரமணிய சிவா என இரு தலைவர்களும் கைது செய்யப்பட்டதன் விளைவாக திருநெல்வேலியில் கலகம் வெடித்தது.
- நீதி மன்றங்கள், காவல் நிலையங்கள், நகராட்சி அலுவலகக் கட்டடங்கள் மீது தீ வைக்கப்பட்டன.
Similar questions