தமிழ்நாட்டில் தொடக்ககால தேசியவாத இயக்கம் அ) சென்னைவாசிகள் சங்கத்தின்நோக்கங்கள் யாவை? ஆ) தமிழ்நாட்டில் தேசியவாதப் பத்திரிகைகள் உருவாவதற்கு எது காரணமாய் அமைந்தது? இ) சென்னை மகாஜன சபையின் நோக்கங்கள் யாவை? ஈ) தமிழ்நாட்டின் தொடக்ககால தேசியத் தலைவர்கள் யார்?
Answers
Answered by
0
தமிழ் நாட்டில் தொடக்க கால தேசியவாத இயக்கம்
- சென்னை வாசிகள் சங்கத்தின் நோக்கங்கள் தனிப்பட்ட குழுக்களின் விருப்பத்தினை விட பொது மக்களின் தேவையினை அனைவருக்கும் தெரிவிப்பது, தனது உறுப்பினர்களின் நலன்களை முன்னெடுப்பது, வரிகளை குறைக்க கோரிக்கை வைப்பது முதலியன ஆகும்.
- இந்தியர்களின் எண்ணங்களை வெளிப்படுத்த மற்றும் கல்வி கற்ற இளைஞர்களை ஊக்கப்படுத்த தமிழ் நாட்டில் தேசிய வாதப் பத்திரிகைகள் தோன்றின.
- சென்னை மகாஜன சபையின் நோக்கங்கள் மாகாணத்தில் பல பகுதிகளில் உள்ள பொதுப் பிரச்சனைகள் குறித்த பொதுவான கருத்தினை உருவாக்கி அதை அரசிற்கு தெரிவிப்பது ஆகும்.
- தமிழ் நாட்டின் தொடக்க கால தேசியத் தலைவர்கள் V.S. சீனிவாச சாஸ்திரி, P.S. சிவசாமி, V. கிருஷ்ணசாமி, T.R. வெங்கட்ராமனார், G.A.நடேசன், T.M. மாதவராவ் மற்றும் S.சுப்பிரமணியனார் ஆவர்.
Similar questions