தமிழ்நாட்டில் புரட்சிகரதேசியவாத இயக்கம் அ) தமிழ்நாட்டை சேர்ந்த சில புரட்சிகர தேசியவாதிகளைப் பட்டியலிடுக. ஆ) சுப்பிரமணிய பாரதியார் பாண்டிச்சேரிக்கு சென்றது ஏன்? இ) சில புரட்சிவாதப் பத்திரிகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக. ஈ) வாஞ்சிநாதன் செய்தது என்ன?
Answers
Answer:
பாரதி என்ற பெயரில் உள்ள இதர கட்டுரைகளுக்கு, பாரதி என்பதைப் பாருங்கள்.
மகாகவி
சி. சுப்பிரமணிய பாரதியார்
பிறப்பு சுப்பையா (எ) சுப்பிரமணியன்
திசம்பர் 11, 1882
எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம், இந்தியா இந்தியா
இறப்பு செப்டம்பர் 11, 1921 (அகவை 38)
சென்னை, இந்தியா
இருப்பிடம் திருவல்லிக்கேணி
தேசியம் இந்தியா
மற்ற பெயர்கள் பாரதியார், சுப்பையா, முண்டாசுக் கவிஞன், மகாகவி, சக்தி தாசன்[1]
பணி செய்தியாளர்
அறியப்படுவது கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி
குறிப்பிடத்தக்க படைப்புகள் பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு மற்றும் பல.
பின்பற்றுவோர் பாரதிதாசன்
அரசியல் இயக்கம் இந்திய விடுதலை இயக்கம்
சமயம் இந்து சமயம்
பெற்றோர் சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள்
வாழ்க்கைத்
துணை செல்லம்மாள்
பிள்ளைகள் தங்கம்மாள் (பி: 1904)
சகுந்தலா (பி: 1908)
கையொப்பம்
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921)[2] ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.[3] தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.[4]
பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தமது குருவாகக் கருதினார்
தமிழ் நாட்டில் புரட்சிகர தேசியவாத இயக்கம்
- தமிழ் நாட்டை சேர்ந்த சில புரட்சிகர தேசியவாதிகள் வ. உ. சிதம்பரனார், V.சர்க்கரையார், சுப்பிரமணிய பாரதி, சுரேந்திரநாத் ஆரியா M.P.T. ஆச்சாரியா, V.V. சுப்ரமணியனார் மற்றும் T.S.S. ராஜன் ஆவர்.
- சிறைத் தண்டணையினை தவிர்ப்பதற்காக பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த பாண்டிசேரிக்கு சுப்பிரமணிய பாரதியார் சென்றார்.
- சில புரட்சி வாதப் பத்திரிகைகளின் பெயர்கள் விஜயா, சூர்யோதயம், இந்தியா முதலியன ஆகும்.
- வாஞ்சி நாதன் 1911 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ல் மணியாச்சி ரயில் சந்திப்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான ராபர்ட் W.D.E. ஆஷ் என்பவரை சுட்டுக் கொன்றார்.
- அதன் பிறகு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.