பிராமணரல்லாதோர் இயக்கம் அ) தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் ஏன் உருவாக்கப்பட்டது? ஆ) பிராமணரல்லாதோர் அறிக்கை என்றால் என்ன? இ) ஈ.வெ.ரா ஏன் பிராமணரல்லாதோர் இயக்கத்தில் இணைந்தார்? ஈ) இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
Answers
Answer:
இந்தி திணிப்புக்கு எதிரான குரல்கள் தமிழகத்தின் அரசியல் மற்றும் பொது வெளிகளில் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
அதற்குக் காரணம் இந்தியாவின் புதிய தேசியக் கல்விக்கொள்கையை அமைக்க உருவாக்கப்பட்ட கஸ்தூரிரங்கன் குழுவின் வரைவு அறிக்கையில் நடுநிலைப் பள்ளிவரை இந்தி, ஆங்கிலம், தொடர்புடைய மாநிலத்தின் மொழி ஆகியவற்றை உள்ளடக்கிய மும்மொழிகளையும் கொண்ட பாடத்திட்டம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளதுதான்.
இந்தியாவிலேயே இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களுக்கு பெயர்போன மாநிலமான தமிழகத்தில் இந்தப் பரிந்துரைக்கும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.
சனியன்று, ஆகிய ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் உலக அளவில் இரண்டாம் மற்றும் நான்காம் இடத்தைப் பெற்றன.
இவற்றைத் தொடர்ந்து, இந்தி கட்டாயமாக்கப்படாது என்று மத்திய, மாநில அரசுகளின் தரப்பிலிருந்து உடனடியாக பதிலும் வந்தது.
மீண்டும் ஒரு மொழிப்போருக்கு வழிவகுக்க வேண்டாம் என்று சில தமிழக அரசியல் தலைவர்கள் வன்மையாக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
படத்தின் காப்புரிமை
இந்தச் சூழலில் மொழிப்போரின் தாக்கம் தமிழகத்தில் எவ்வளவு ஆழமாக இருந்தது அதன் பின்னணி ஆகியவற்றை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
இந்திதிணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் - முதல் அத்தியாயம்
இந்தியா விடுதலை அடையும் முன்னரே 1937-இல் பிரிக்கப்படாத மதராஸ் மாகாணத்தில் ராஜாஜி என்று பரவலாக அறியப்படும் சி.ராஜகோபாலாச்சாரி தலைமையிலான காங்கிரஸ் அரசு, நடுநிலைப் பள்ளி வகுப்புகளில் (6,7,8ஆம் வகுப்புகள்) இந்தி கற்பிப்பதைக் கட்டாயமாக்கியது.
அப்போது மதராஸ் மாகாணத்தில் இருந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு விருப்ப மொழிப் பாடமாக இருந்த தமிழ், தெலுங்கு, கன்னடம் அல்லது மலையாளம் ஆகிய மொழிகளில் ஒன்றுடன் இந்தி பயில்வதும் கட்டாயமானது.
மதராஸ் மாகாண காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும் இந்தியாவில் பரவலாகப் பேசப்படும் மொழியைப் படிக்க வேண்டும் என முதலமைச்சர் ராஜாஜி உறுதியாக இருந்தார்.
தென்மாநிலங்களில் அதிகரிக்கும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை
சுதந்திரம் அடையும் முன்னர் தேவனாகிரி எழுத்து வடிவில் எழுதப்படும் இந்தி 'இந்துஸ்தானி' என்ற பெயரிலேயே பரவலாக வழங்கப்பட்டது. நவீன இந்தி, உருது ஆகிய மொழிகளை உள்ளடக்கிய பொது வடிவமாகவே இந்துஸ்தானி இருந்தது.
தேசப் பிரிவினைக்குப் பிறகு, வட இந்திய மொழியான கடிபோலியை அடிப்படையாகக் கொண்ட தேவனாகிரி எழுத்து வடிவம் கொண்ட இந்துஸ்தானி 'இந்தி' என்றும், அரபு மற்றும் பாரசீக மொழிச் சொற்களின் தாக்கம் அதிகம் கொண்ட, பாகிஸ்தான் பகுதிகளில் பரவலாக வழங்கப்பட்ட, தேவனாகிரி எழுத்து வடிவம் கொண்ட இந்துஸ்தானி உருது என்றும் வழங்கப்படுகின்றன என்பது இந்தி எதிர்ப்புப் போராட்டத்துடன் தொடர்பில்லாத கூடுதல் தகவல்.
படத்தின் காப்புரிமை
கட்டாய இந்திக்கு எதிராக நீதிக் கட்சியும், பெரியார் தலைமையில் பின்னர் திராவிட கழகமாக உருவான சுயமரியாதை இயக்கமும் போராட்டத்தில் இறங்கின.
பிராமணர் அல்லாதோர் இயக்கம்
- பிராமணர் அல்லாதோர் தங்களின் நலன்களை பாதுகாத்த கொள்ள தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தினை உருவாக்கினர்.
- தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தான் வெளியிட்ட பிராமணர் அல்லாதோர் அறிக்கையில் அரசு பணியிடங்களில் பிராமணர் அல்லாதோருக்கு இட ஒதுக்கீடு மற்றும் பிரதிநிதித்துவ அமைப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என கூறியிருந்தது.
- அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளில் பிராமணர்களின் ஆதிக்கத்தினை ஒழிக்க ஈ.வெ.ரா பெரியார் பிராமணர் அல்லாதோர் இயக்கத்தில் இணைந்தார்.
- இராஜாஜி பள்ளிகளில் இந்தியினை கட்டாய பாடமாக அறிவித்தார்.
- இதனால் தமிழ் மொழியும், பண்பாடும் அழிய வழிவகை செய்யும் என்பதால் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது.