சூரியநாராயண சாஸ்திரி எனும் பெயர் ____________ என மாற்றம் பெற்றது
Answers
Answered by
0
Explanation:
பரிதிமாற் கலைஞர் எனப்படும் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் (சூலை 6, 1870 - நவம்பர் 2, 1903) ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றியவர்.[1]
Answered by
0
பரிதிமாற் கலைஞர்
- 1870 ஆம் ஆண்டு மதுரைக்கு அருகே வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி பிறந்தார்.
- இவர் தமிழ் பேராசிரியராக சென்னை கிறித்தவக் கல்லூரியில் பணி புரிந்தார்.
- தமிழின் மீது கொண்ட பேரன்பு மற்றும் தமிழ் மொழியின் மீதான சமஸ்கிருதத்தின் தாக்கத்தினை ஒழித்தல் முதலிய காரணங்களால் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி என்ற தன் பெயரை பரிதிமாற் கலைஞர் என தூய தமிழில் மாற்றிக் கொண்டார்.
- தமிழ் மொழி ஒரு செம்மொழி.
- எனவே தமிழ் மொழியினை சென்னைப் பல்கலைக்கழகம் ஒரு வட்டார மொழி என அழைக்க வேண்டும் என முதன் முறையாக வாதிட்டவர் பரிமாற் கலைஞரே.
- பரிதிமாற் கலைஞர் நாவல்கள், நாடகங்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான அறிவியல் கட்டுரைகளை எழுதினார்.
Similar questions