பெரியார் ஈ.வெ.ரா அ) பெரியார் எப்போது திராவிடர் கழகத்தை தோற்றுவித்தார்? ஆ) பெரியார் நடத்திய செய்தித்தாள்கள், பத்திரிகைகள் ஆகியவற்றி ன் பெயர்களைக் குறிப்பிடுக. இ) பெரியார் ஏன் “வைக்கம் வீரர்” என அறியப்பட்டார்? ஈ) பெரியாரின் மிக முக்கியப் பணியாக கருதப்படுவது எது?
Answers
Answered by
3
Answer:
myy friend
write in English friend
Answered by
1
பெரியார் ஈ.வெ.ரா
- பெரியார் சிறையில் இருந்த போதே நீதிக்கட்சி தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
- அதன் பிறகு பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துடன் நீதிக் கட்சி இணைந்தது.
- 1944 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்த நீதிக் கட்சிக்கு திராவிடர் கழகம் என புதிய பெயர் சூட்டப்பட்டது.
- பெரியார், குடிஅரசு (1925), ரிவோல்ட் (1928), புரட்சி (1933), பகுத்தறிவு (1934), விடுதலை (1935) முதலியன பல செய்தித்தாள்கள் மற்றும் இதழ்களை தொடங்கினார்.
- பெரியார் கேரள மாநிலத்தில் உள்ள வைக்கம் என்ற இடத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்குமாறு போரட்டம் செய்து வெற்றி பெற்றார்.
- இதன் காரணமாக வைக்கம் வீரர் என அழைக்கப்பட்டார்.
- பெரியாரின் மிக முக்கியப் பணியாக கருதப்படுவது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியது, பகுத்தறிவு கொள்கைகளை பரப்பியது, மதுவிற்கு எதிராக போராடியது மற்றும் பெண் விடுதலைக்காக போராடியது முதலியன ஆகும்.
Similar questions