பேரிடர் அபாய நேர்வு - வரையறு.
Answers
Explanation:
அவசரநிலை நிர்வகித்தல் (அல்லது பேரழிவு நிர்வகித்தல்) என்பது அபாயநிலைகளைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கை ஆகும்.[1] பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு அதை எதிர்கொள்வதற்கு எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையே இப்பணியாகும். பேரழிவுக்கு எதிரான நடவடிக்கை (எ.கா., அழிவு ஏற்பட இருக்கும் பகுதியை அவசரமாகக் காலி செய்தல், தொற்றுநோய் பரவாமல் தடுத்தல், தூய்மை செய்தல் மற்றும் பல), இயற்கையாலோ அல்லது மனிதர்களாலோ உருவாக்கப்பட்ட பேரழிவுகளுக்குப் பின்னர் சமுதாயத்தை மறுசீரமைத்தல் போன்றவையும் இப்பணியில் மேற்கொள்ளப்படுகிறது. அவசரநிலை நிர்வகித்தல் என்பது இடர்பாடுகளின் விளைவாய் ஏற்படும் பேரழிவுகளின் பாதிப்புகளை சீர்படுத்தவோ அல்லது தவிர்க்கவோ தனிப்பட்ட நபர்களாலோ, குழுவாகவோ அல்லது சமுதாயத்தினர்களாலோ தொடரப்படும் செயல்பாடாகும். அழிவு ஏற்பட்ட பகுதியைப் பொறுத்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.[2] அரசாங்கம் சார்ந்த மற்றும் அரசாங்கம் சாரா ஈடுபாடுகளின் அனைத்து நிலைகளிலும் அவசரகால திட்டங்களின் ஒருமைப்பாட்டை பயனுள்ள அவசரநிலை நிர்வகித்தல் முற்றிலுமாக சார்ந்திருக்கிறது. ஒவ்வொரு நிலையில் உள்ள நடவடிக்கைகளும் (தனிநபர், குழு, சமூகம்) மற்ற நிலைகளைப் பாதிக்கிறது. இது குடியியல் பாதுகாப்புக்கான நிறுவனங்களுடன் அல்லது அவசரநிலை சேவைகளின் உடன்பாடான கட்டமைப்பினுள் அரசாங்கம் சார்ந்த அவசரநிலை நிர்வகித்தலுக்கான பொறுப்பில் அங்கம் வகிப்பதற்குப் பொதுவானதாக இருக்கிறது. தனியார் துறைகளில் அவசரநிலை நிர்வகித்தல் என்பது சிலநேரங்களில் வணிகத் தொடர்ச்சித் திட்டமிடல் எனக் குறிப்பிடப்படுகிறது.
பேரிடர் அபாய நேர்வு
- உயிர்கள் மற்றும் உடைகள் ஆகிய இரண்டிற்கும் இயற்கையினால் ஏற்படுகின்ற பேரழிவிற்கு பேரிடர் என்று பெயர்.
- பேரிடருக்கான காரணங்களை முறையாக கண்டறிந்து பேரிடர் ஏற்படும் போது அதன் தாக்கங்களை குறைப்பதே பேரிடர் அபாய குறைப்பு (Disaster Risk Reduction) என ஐக்கிய நாடுகள் சபையின் அபாய நேர்வு குறைப்பு அமைப்பு (UNDRR) கூறுகிறது.
- பேரிடர் அபாய நேர்வு அல்லது பேரிடர் அபாய குறைப்பு ஆனது இடர் உண்டாகும் இடங்களைத் தவிர்த்தல், மக்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதிப்பினைக் குறைப்பது, நில மேலாண்மை, சூழ்நிலை மேலாண்மை, எதிர் விளைவுகள் குறித்தத் தயார் நிலை மற்றும் எச்சரிக்கை முதலியனவற்றினை உள்ளடக்கியதாக உள்ளது.