தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் தமிழ்நாடு மிகக்குறைந்த மழையைப் பெறுகிறது.
Answers
Answered by
0
தென் மேற்கு பருவக் காற்று
- சூரியனின் செங்குத்து கதிர்களால் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வட இந்திய நிலப் பரப்பு ஆனது அதிக வெப்பத்தினை அடைகிறது.
- இதன் காரணமாக வட இந்திய பகுதிகளில் குறைந்த காற்று அழுத்தம் தோன்றுகிறது.
- இதனால் அதிக காற்று அழுத்தம் கொண்ட காற்று ஆனது இந்தியப் பெருங்கடலில் இருந்து வடக்கு நோக்கி வீசுகிறது.
- இது தென் மேற்கு பருவக்காற்று உருவாக காரணமாக அமைகிறது.
- தென் மேற்கு பருவக்காற்று காலத்தில் தமிழ் நாடு அரபிக் கடலிலிருந்து வீசும் தென் மேற்கு பருவக் காற்றின் மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்து உள்ளது.
- இதன் காரணமாக தென் மேற்கு பருவகாற்று காலங்களில் தமிழ் நாடு மிகக் குறைந்த மழையை பெறுகிறது.
Similar questions