தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை துறையின் பங்கு__________ சதவீதத்தை வகிக்கிறது.
Answers
Explanation:
தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் (ஆங்கிலம்: Economy of TamilNadu) சேவைத் துறை 45%, தொழில் துறை 34%, விவசாயம் 21% பங்களிக்கின்றன. தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் (2013–14) இந்தியாவின் மாநிலங்களில் நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. கோயம்புத்தூர் நெசவாலைகளுக்கும், ஈரோடு மஞ்சள் சாகுபடி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கும், சேலம் இரும்பு உருக்கு ஆலைகளுக்காகவும், நாமக்கல் கோழிப் பண்ணைகள், குழாய்க் கிணறு அமைக்கும் தொழில், பண்டங்களைப் போக்குவரவு செய்யும் கனரக வாகனங்களை இயக்கும் தொழிலுக்காகவும், சிவகாசி அச்சுத் தொழில், பட்டாசு உற்பத்திக்கும், காவிரிப் பாசனப் பகுதியில் அமைந்துள்ள திருச்சி, வேலூர் தோல் தொழிலுக்கும், தஞ்சை போன்ற பகுதிகள் விவசாயத்திற்கும், சென்னை வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றுள்ளன.
21 %
வேளாண்மை
- பயிர்கள் சாகுபடி, கால்நடை வளர்த்தல், பறவைகள், காடுகள் வளர்த்தல், மீன் பிடித்தல் மற்றும் அதனோடு தொடர்புடைய நடவடிக்கைகள் விவசாயம் சார்ந்த நடைமுறைகளே வேளாண்மை ஆகும்.
- வேளாண்மை தமிழ் நாட்டின் மிக முக்கியமான தொழிலாக கருதப்படுகிறது.
- நம் நாடு விடுதலை பெற்றதிலிருந்து தற்போது வரை 65% க்கும் மேலான மக்களுக்கு வாழ்வாதாரமாக வேளாண்மை விளங்குகிறது.
- அதிக கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் தொழிலாக வேளாண்மை திகழ்கிறது.
- பொருளாதார வளர்ச்சி மற்றும் வேளாண்மை ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு காணப்படுகிறது.
- தமிழ் நாட்டின் பொருளாதாரத்தில் 21% பங்கினை வேளாண்மை தருகிறது.
- எனினும் இந்த அளவான ஒவ்வொரு ஆண்டும் மாறக்கூடியது.