கூற்று: கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மண்டலம் தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது. காரணம்: இவைகள் நெசவாலைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை அளிக்கின்றன. அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம், கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும். ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல. இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு. ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
Answers
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
- காரணம், கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்
தமிழ் நாட்டில் பருத்தி நெசவாலைகள்
- பருத்தி ஆடைகள் உற்பத்தி செய்ய தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட 3 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள் காணப்படுகின்றன.
- இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் தமிழ் நாட்டின் பங்களிப்பு 30 சதவீதம் ஆகும்.
- கைத்தறி, விசைத்தறி மற்றும் ஆயத்த ஆடைகள் விற்பனைக்கு ஈரோடு புகழ் பெற்றதாக விளங்குகிறது.
- தமிழ் நாட்டின் மான்செஸ்டர் என கோயம்புத்தூர் அழைக்கப்படுகிறது.
- நெசவுத் தொழில்கள் மூலமாக மாநில பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கினை கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்கள் வகிக்கின்றன.
- எனவே இவை தமிழ் நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகின்றன.
- அதே போல தமிழ் நாட்டின் நெசவுத் தலைநகரம் என கரூர் மாவட்டம் அழைக்கப்படுகிறது.
Similar questions