தமிழ்நாட்டின் வேளாண் பருவக்காலங்களை எழுதுக
Answers
Answered by
1
தமிழ் நாட்டின் வேளாண் பருவக் காலங்கள்
- மண்ணின் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை ஆகியவற்றினை அடிப்படையாக கொண்டு தமிழ் நாட்டின் வேளாண் பருவக் காலங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
சொர்ணவாரி (சித்திரைப் பட்டம்)
- சித்திரைப் பட்டம் எனப்படும் சொர்ணவாரி பருவக் காலத்தில் விதைக்கும் காலமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் உள்ளன.
- அதே போல அறுவடை காலங்களாக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் உள்ளன.
- பருத்தி மற்றும் தினை வகைகள் சொர்ணவாரி பருவக் காலத்தில் விதைக்கப்படும் முக்கிய பயிர் வகைகள் ஆகும்.
சம்பா (ஆடி பட்டம்)
- ஆடி பட்டம் எனப்படும் சம்பா பருவக் காலத்தில் விதைக்கும் காலமாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் உள்ளன.
- அதே போல அறுவடை காலங்களாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் உள்ளன.
- நெல் மற்றும் கரும்பு ஆடி பட்டத்தில் விதைக்கப்படும் முக்கிய பயிர் வகைகள் ஆகும்.
நவரை
- நவரையில் நவம்பர் - டிசம்பர் விதைக்கும் காலமாகவும், பிப்ரவரி - மார்ச் அறுவடை காலமாகவும், பழங்கள், காய்கறிகள், வெள்ளரி, தர்பூசணி முக்கிய பயிர் வகைகளாகவும் உள்ளன.
Similar questions
Hindi,
4 months ago
Science,
4 months ago
Political Science,
4 months ago
Math,
10 months ago
Math,
1 year ago