கோயம்புத்தூர் ஏன் தமிழ்நாட்டின் 'மான்செஸ்டர்' என அழைக்கப்படுகிறது.
Answers
Explanation:
கோயம்புத்தூர் (Coimbatore) தென்னிந்திய மாநிலமான, தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரமாகும். இதே பெயரைக் கொண்ட மாவட்டத்தின் தலைமையிடமான இது தொழில் வளர்ச்சியிலும் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும் மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும். இதை சுருக்கமாக கோவை (Kovai) என்று அழைக்கப்படுகிறது. தொழில் முனைவோர் கூடுதலாக உள்ள நெசவு மற்றும் பொறியியல் தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அவிநாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களும் கோவை மாநகரை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. தொன்மையான கொங்கு நாடு பகுதியைச் சேர்ந்த இந்நகரம், இங்குள்ள ஆலைகளின் எண்ணிக்கையால் தென்னிந்திய மான்செஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நகரத்திலும், புறநகர்ப்பகுதிகளும் 2.1 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
தமிழ் நாட்டின் மான்செஸ்டர் என கோயம்புத்தூர் அழைக்கப்படக் காரணம்
பருத்தி நெசவு ஆலைகள்
- தமிழகத்தில் அதிகமான நெசவு ஆலைகள் கோயம்புத்தூர் மாவட்டத்தினை சுற்றியுள்ள 100 முதல் 150 கி.மீ தொலைவில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் காணப்படுகின்றன.
- இதன் காரணமாகவே தமிழகம், நாட்டின் பருத்தி நெசவு தொழில் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- தங்களது வீடுகளிலேயே நன்கு செயல்படும் விசைத்தறி நெசவுத் தொழில் தொகுப்புகளை சொந்தமாகவே கோயம்புத்தூரின் பல்லடம் மற்றும் சோமனூர் சுற்றியுள்ள சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள மக்கள் உற்பத்தி செய்கின்றனர்.
- இதன் காரணமாக கோயம்புத்தூர் தமிழ் நாட்டின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது.
- நெசவுத் தொழில்கள் மூலமாக மாநில பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கினை கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்கள் வகிப்பதால் இவை தமிழ் நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகின்றன.