கோவில்களில் பெரும்பாலும் கூட்ட நெரிசலால் விபத்துகள் ஏற்படுகின்றன ஏன்?
Answers
Explanation:
சாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்தியாவில் நாளொன்றுக்கு 400 பேர் சாலை விபத்துகளால் உயிரிழக்கின்றனர். கடந்த ஆண்டு கணக்கெடுப்பின்படி, அதிகமாக விபத்துகள் ஏற்படும் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடம் உத்தரப்பிரதேசத்துக்கு.
வாகனப் பெருக்கம், சாலை நெரிசல், மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாத மனோபாவம், சாலை விதிகளை மீறுதல், குறுகலான பாதையில் எதிரெதிரே செல்லுதல், அதீத வேகத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்லுதல் போன்ற பல காரணங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன.
ஆயினும், ‘விபத்துகளுக்கு மிக முக்கியக் காரணங்களாக இருப்பது Road rage எனப்படும் சாலை வெறியே’ என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
இதுகுறித்து உளவியல் நிபுணர் ஶ்ரீனிவாசன் விரிவாகப் பேசுகிறார்.
“எதிர்பாராத தருணங்களில் விபத்துகள் நடப்பது இயல்பு. ஆனால், அண்மைக்காலமாக விபத்துகள் அதிகரிக்கக் காரணம் சாலை வெறி தான். இந்த வார்த்தை கொஞ்சம் பயங்கரமாகத் தெரியலாம். ஆனால், இது ஒரு உளவியல் பிரச்னை. பிற வாகனங்களில் செல்பவரின் மீதும், சாலையில் செல்பவரின் மீதும் தாக்குதல் நடத்துதல், ஹாரன்களை ஒலித்து, அதிக இரைச்சலை ஏற்படுத்துதல், திட்டுதல், சண்டை போடுதல், வாகன நெரிசலினால் ஏற்படும் உணர்ச்சிப்பெருக்கு, சைகைகள் மூலமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல் போன்றவை சாலைவெறி என்னும் 'ரோட் ரேஜ்' அறிகுறிகள். இது பெரும்பாலும் 18 முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களை அதிகமாகப் பாதிக்கிறது. இதனால், பெண்களைவிட ஆண்களே அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
கோவில்களில் பெரும்பாலும் கூட்ட நெரிசலால் விபத்துகள் ஏற்படுவதற்கான காரணம்
- கோவில்களில் சுவாமி தரிசனம், தேரோட்டம், திருவிழாக்கள், அன்னதானம் வழங்குதல் முதலியன நடைபெறும்.
- இறைவனை தரிசிக்க ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இலட்சக்கண மக்கள் கூடுவதால் கூட்ட நெரிசல் உருவாகிறது.
- ஒரே நேரத்தில் இலட்சக்கண மக்கள் கூடுவதால் ஏற்படும் கூட்ட நெரிசலின் காரணமாக மக்கள் ஒருவரை ஒருவர் இடித்தல், மிதித்தல், சிலருக்கு மயக்கம், மூச்சுத்திணறல் முதலியன ஏற்படுகிறது.
- சில சமயங்களில் அதிகமான கூட்ட நெரிசலினால் காயங்கள், உடல் ஊனம் ஏற்படுதல், உயிரிழப்புகள் முதலியன ஏற்படுகின்றன.
- உதாரணமாக 2019 ஆம் ஆண்டு சித்ரா பெளர்ணமி அன்று துறையூருக்கு அருகே உள்ள முத்தையம் பாளையத்தில் நடந்த கருப்பசாமி கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட நெரிசலினால் 7 பேர் உயிரிழந்தனர்.
- 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.