எந்த இரு நாடுகளுக்கிடையே பஞ்சசீல ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது? அ) இந்தியா மற்றும் நேபாளம் ஆ) இந்தியா மற்றும் பாகிஸ்தான் இ) இந்தியா மற்றும் சீனா ஈ) இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா
Answers
Answer:
இந்தியா மற்றும் சீனா....
explanation:
அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கொள்கைகள்தான் பஞ்சசீலக் கொள்கை என்று அழைக்கப்படுகிறது. (பாலி மொழியில் பஞ்ச் என்றால் ஐந்து, ஷீல் என்றால் நற்பண்புகள்) இது இந்தியாவிலும் நேபாளத்திலும் பரவலாக அறியப்படும் சொற்களாகும்.
இந்த பஞ்சீலக் கொள்கை இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டதாகும். இந்த உடன்படிக்கையின்படி, திபெத்திய பகுதிகளில் வர்த்தகம் மற்றும் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக 1954ல் உருவாக்கப்பட்டதாகும்.
இந்த உடன்படிக்கையின்படி,திபெத்திய பகுதிகளில் வர்த்தகம் மற்றும் நல்லுறவை இந்தியாவும்,சீனாவும் மேற்கொள்வது தொடர்பாக 1954 ஏப்ரல் 29ல் உடன்படிக்கை கையெழுத்தானது,
இந்த ஒப்பந்தம் கீழ்கானும்
ஐந்து தொகு
முக்கிய கொள்கைகளை வலியுறுத்துகிறது.
பரஸ்பரம் இரு நாடுகளும் அடுத்த நாட்டின் ஒற்றுமையையும்,இறையாண்மையும் மதிக்க வேண்டும்.
பரஸ்பரம் இரு நாடுகளும் எல்லைகளை அத்து மீறக்கூடாது.
பரஸ்பரம் இரு நாடுகளும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடது.
சமத்துவ மற்றும் பரஸ்பர நலனுக்காக பாடுபடுதல்.
சமாதான சக வாழ்வு.
இந்தியா மற்றும் சீனா
பஞ்சசீல ஒப்பந்தம்
- சமஸ்கிருதச் சொற்களான பாஞ்ச் என்றால் ஐந்து என்றும், சீலம் என்றால் நற்பண்புகள் என்றும் பொருள் ஆகும்.
- பஞ்ச சீல ஒப்பந்தம் ஆனது இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்டு உள்ளது.
- அதாவது 1954 ஏப்ரல் மாதம் 28ஆம் நாள் இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் சீன பிரதமர் சூயெயன்-லாய் ஆகிய இருவரும் இரு நாடுகளுக்கு இடையே அமைதியான உறவு நிலவ ஐந்து கொள்கைகளை உடைய பஞ்சசீல ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- 1955 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆப்பிரிக்க ஆசிய மாநாட்டில் பஞ்ச சீல கொள்கைகள் கையெழுத்தான பாண்டுங் பிரகடனத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது.