கீழ்க்காணும் ஒவ்வொரு கூற்றுக்கும் எதிராக சரியா/தவறா என எழுதுக அ) பனிப்போரின் போது சர்வதேச விவகாரங்களில் இந்தியா மூன்றாவது அணியை உருவாக்க முயற்சித்தது. ஆ) இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நிறைவேற்றும் பொறுப்பு இந்திய உள்துறை அமைச்சகத்தைச் சார்ந்தது. இ) இந்தியாவின் அணுசக்தி சோதனை பூமிக்கடியிலான அணு சோதனை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது.
Answers
Answered by
0
சரியா தவறா
அ) சரி
- வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பனிப்போர் ஆனது நிலவியது.
- இதனை விரும்பாத நேரு காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்து புதியதாக உருவான நாடுகளை சேர்த்து சர்வதேச விவகாரங்களில் மூன்றாவது அணியினை உருவாக்க எண்ணி முயன்றார்.
ஆ) தவறு
- இந்திய அரசின் ஒரு அங்கமாக திகழ்கின்ற வெளியுறவு அமைச்சகம் அல்லது இந்திய வெளி விவகார அமைச்சரவை ஆனது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நிறைவேற்றும் பொறுப்பினை கொண்டு உள்ளது.
இ) சரி
- 1964 ஆம் ஆண்டு சீனா லாப் நார் என்ற இடத்தில் அணு சோதனையினை மேற்கொண்டதற்கு பதிலடியாக இந்தியா தனது முதல் பூமிக்கு அடியிலான அணு சோதனைத் திட்டத்தினை (நிலத்தடி அணு வெடிப்புத் திட்டம்) 1974 ஆம் ஆண்டு நடத்தியது.
Similar questions