India Languages, asked by anjalin, 10 months ago

இந்தியாவின் அணுசக்தி கொள்கையை விவரி.

Answers

Answered by Lakshith1211
1

Answer:

அணுக்கரு ஆற்றல் இந்தியாவின் மின்சார உற்பத்தியில் அனல், புனல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு அடுத்து நான்காமிடத்தில் உள்ளது.[1] 2012 வரை, இந்தியாவில் ஆறு அணு மின் நிலையங்களில் இயங்கும் 20 அணுக்கரு உலைகளில் 4,780 மெவா மின்சாரம் உற்பத்தியாகிறது.[2] மேலும் ஏழு அணுக்கரு உலைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன; இவற்றின் மூலம் கூடுதலாக 5,300 மெகாவாட் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.[3]

அக்டோபர் 2010இல் இந்தியாவில் "2032ஆம் ஆண்டுக்குள் 63,000 மெவா அணுமின் ஆற்றலை உற்பத்தி செய்ய திட்டமொன்றை" தீட்டியபோதும்,[4] "திட்டமிடப்பட்ட பகுதி மக்களின் எதிர்ப்புகளாலும் அணுக்கரு உலை குறித்த பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடாதிருத்தல் குறித்து எழுந்த புதிய ஐயங்களாலும்" இது தள்ளிப்போடப்படுள்ளது.[5] மகாராட்டிரத்தில் பிரெஞ்சு நிறுவனம் அமைக்கும் 9900 மெவா கொள்ளளவு கொண்ட ஜெய்தாபூரிலும் தமிழ்நாட்டில் உருசிய கூட்டுறவுடன் நிறுவப்படும் 2000 மெவா கொள்ளளவு கொண்ட கூடன்குளத்திலும் பலத்த எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. மேற்கு வங்காள அரசும் அரிப்பூரில் நிறுவப்படத் திட்டமிட்டிருந்த 6000 மெவா திறன் கொண்ட ஆறு உருசிய அணு உலைகளுக்கு அனுமதி மறுத்துள்ளது.[5] அரசின் அணுக்கரு ஆற்றல் திட்டதிற்கெதிராக பொது நல வழக்கொன்று உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.[5][6] இத்தகையத் தடங்கல்கள் இருப்பினும் 2011-12ஆம் ஆண்டில் இந்திய அணுமின் நிலையங்கள் தங்கள் திறனின் 79% அளவில் உற்பத்தி செய்தன; இந்த ஆண்டில் இருபது உலைகளில் ஒன்பது உலைகள் வரலாற்றுச் சிறப்பாக தங்கள் திறனின் 97% ஐ எட்டின.

இந்தியா வெளிநாட்டை நம்பியிருக்க வேண்டிய யுரேனியத்திற்கு மாற்றாக தோரியம் சார்ந்த அணு எரிபொருள்கள் குறித்தும் குறை செறிவூட்டப்பட்ட யுரேனியம் மற்றும் தோரியத்தைப் பயன்படுத்தும் அணுக்கரு உலை வடிவமைப்பில் ஆய்வு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.[7] குளிர்ந்த அணுப்பிணைவு ஆய்வுகளில் இந்தியா தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.[8] உலகின் மிகவும் பெரிய, மிகவும் முன்னேறிய ஆய்வு டோகாமாக் அணுக்கரு இணைவு உலையான பன்னாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வுலை திட்டத்திற்கும் ஆதரவளித்துள்ளது.

Explanation:

Thanks, follow, 5 star, brainliest

Answered by steffiaspinno
0

இந்தியாவின் அணு சக்தி கொள்கை

  • படை வ‌லிமை‌க் குறை‌ப்‌பினை நடைமுறை‌ப்படு‌த்துவதே நமது மரபு ம‌ற்று‌ம் தே‌சிய நெ‌றி முறைக‌ள் ஆகு‌ம்.
  • இ‌ந்‌தியா அமை‌தி‌யினை ‌விரு‌ம்பு‌ம் நாடாக ‌திக‌ழ்‌‌கிறது.
  • ஆர‌ம்ப‌க் கால‌ம் முத‌லே கரு‌த்து ம‌ற்று‌ம் எ‌ண்‌ணி‌க்கை அடி‌ப்படை‌யி‌ல் படை ‌வ‌லிமை‌ குறைப்புக் காரணங்களுக்காகப் போராடி வருகிறது.
  • ‌விடுதலை பெ‌ற்ற‌தி‌ல் இரு‌ந்து இந்தியாவின் அணு கொள்கையில் மேலோங்கிய ஒரு கருத்தாக உலகளவில் ஆயுதப் பெருக்கத் தடை உ‌ள்ளது.
  • இத‌ன் காரணமாகவே இ‌ந்‌தியா ஐ.நா.வின் படை வலிமைக் குறைப்புத் திட்டங்களுக்கு த‌ன் ஆத‌ர‌வினை தெ‌ரி‌‌வி‌த்தது.
  • முதலில் பயன்படுத்துவதில்லை ம‌ற்று‌ம் குறைந்தபட்ச நம்பகமான தற்காப்புத் திற‌ன் முத‌லியன இ‌ந்‌திய அணு‌க் கொ‌ள்கை‌யி‌ன் இர‌ண்டு மைய‌க் கரு‌த்துக‌ள் ஆகு‌ம்.
Similar questions