இந்தியா அணிசேராக் கொள்கையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?
Answers
Answer:
கூட்டுசேரா இயக்கம் அல்லது அணி சேரா இயக்கம் (Non-Aligned Movement, NAM) எந்தவொரு அதிகார மையத்தின் சார்பாகவோ எதிராகவோ அணிசேராத நாடுகளின் குழுமமாகும். 2011ஆம் ஆண்டு நிலவரப்படி, இதில் 120 நாடுகள் உறுப்பினர்களாகவும் 17 நாடுகள் பார்வையாளர்களாகவும் உள்ளனர். 2016 இல் 17வது மாநாடு வெனிசுவேலாவில் இடம்பெற்றது.
இந்த இயக்கம் 1961ஆம் ஆண்டு பெல்கிரேட்டில் உருவானது. யுகோசுலாவியாவின் அதிபராக இருந்த சோசப்பு பிரோசு டிட்டோ, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, எகிப்தின் இரண்டாவது தலைவர் ஜமால் அப்துல் நாசிர், கானாவின் முதல் தலைவர் குவாமே நிக்ரூமா மற்றும் இந்தோனேசியாவின் முதல் தலைவர் சுகர்ணோ இவர்களின் கருத்தாக்கத்தில் இந்த இயக்கம் துவங்கியது. இந்த ஐவருமே பனிப்போரில் ஈடுபட்டிருந்த மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய அதிகார மையங்களுக்கு இடையே நடுநிலையில் வளரும் நாடுகள் செல்லவேண்டும் என்ற கருத்துடையவர்களாக இருந்தனர். இந்த சொல்லாடலை ஐக்கிய நாடுகள் அவையில் 1953ஆம் ஆண்டிலேயே இந்தியாவின் பிரதிநிதியாக இருந்த வி. கே. கிருஷ்ண மேனன் கையாண்டார்.[3]
தற்போதைய உறுப்பினர்கள்
ஆபிரிக்கா ஆபிரிக்காவில் சூடானைத் தவிர அனைத்து நாடுகளும் கூட்டுசேரா இயக்கத்தின் உறுப்பினர்களாகும்.
Explanation:
Thanks, follow, 5 star, brainliest
இந்தியா அணி சேராக் கொள்கையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம்
- வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகிய இரு நாடுகள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் புதிதாகத் தோன்றிய நாடுகளில் தங்களது செல்வாக்கைச் செலுத்துவதை நம் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்கள் எதிர்த்தார்.
- மேலும் வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பனிப்போர் நிலவியது.
- இதனை விரும்பாத நேரு அந்த இரு வல்லரசு நாடுகளுடனும் சேராமல் அணி சேரா இயக்கம் என்ற வழியினை தேர்ந்து எடுத்தார்.
- மேலும் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்து புதியதாக உருவான நாடுகளை சேர்த்து சர்வதேச விவகாரங்களில் மூன்றாவது அணியினை உருவாக்க எண்ணி முயன்றார்.